கேரளாவை சேர்ந்த விஸ்மயா எனும் இளம்பெண் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட செய்தி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் மோகன்லால் வரதட்சணை கொடுமைக்கு எதிராக பேசும் புதிய வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கேரள மாநிலத்தில் கொல்லம் கைத்தொடு பகுதியை சேர்ந்த விக்ரமன் நாயர் அவர்களின் மகளான ஆயுர்வேத கல்லூரியில் மருத்துவம் முடித்தவர். சஸ்தம்கோட்டா பகுதியைச் சேர்ந்த கிரண்குமார் என்பவரோடு விஸ்மயாவிற்கு ஓர் ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு விஸ்மயாவின் தந்தை விக்ரமன் நாயர், 100 சவரன் நகை, ஒரு ஏக்கர் நிலமும் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான ஒரு காரும் கிரன் குமாருக்கு வழங்கியுள்ளனர். 

இந்நிலையில் வரதட்சணையாக கொடுக்கப்பட்ட கார் பிடிக்கவில்லை என காருக்குப் பதிலாக 10 லட்சம் ரூபாய் ரொக்கமாக வழங்கும்படி கிரண்குமார் கேட்டுள்ளார். அதற்கு விவிஸ்மயாவின் வீட்டினர் மறுப்பு தெரிவித்ததால் விஷ்ணுகுமார் வரதட்சணை கேட்டு விஸ்மயாவை தொடர்ந்து கொடுமைப்படுத்தி உள்ளார். விஸ்மயாவை தகாத வார்த்தைகளால் பேசி, பயங்கரமாக அடித்து உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் மோசமாக துன்புறுத்தியுள்ளனர்.

கடைசியில் இந்த வரதட்சணை கொடுமையின் கோரப் பசிக்கு விஸ்மயா பலியானார். விஸ்மயாவை அடித்து துன்புறுத்திய புகைப்படங்களை தனது வீட்டாருக்கு வாட்ஸ்அப் மூலமாக தெரிவித்த விஸ்மயா மிகுந்த மனவேதனையில் குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இச்சம்பவம் தற்போது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் இந்த சூழலில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அவர்கள் தனது அடுத்த திரைப்படமான ஆராட்டு திரைப்படத்தில் வரதட்சணைக்கு எதிரான மற்றும் பெண்களின் கல்வி சுதந்திரம் ஆகியவற்றை முன்னிறுத்தி பேசும் ஒரு Sneak Peek விடியோவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது.