“வடிவேலு காமெடி போல் 100 வது திருட்டை கொண்டாட நினைத்த திருட்டு கும்பல்” ஒன்று, போலீசாரிடம் வசமாக சிக்கி கைதாகி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“நகரம்” திரைப்படத்தில், திருடனாக நடித்திருக்கும் நடிகர் வடிவேலு, தனது சகாக்களுடன் சேர்ந்து 100 வது திருட்டின் சம்பவம் முடிந்த கையோடு போலீசாரிடம் சிக்கிக் கொள்வார். 

அதைப்போல, வடிவேலு நகைச்சுவையைப் போன்று, சென்னை அம்பத்தூரில் தான் நிஜத்தில் ஒரு திருட்டு கும்பல் போலீசாரிடம் வசமாக சிக்கிக்கொண்டு உள்ளது.

சென்னை கொளத்தூர் செந்தில் நகர் பகுதியைச் சேர்ந்த 54 வயதான கிருஷ்ணன், சென்னை வில்லிவாக்கம் காய்கறி சந்தையில் கடை நடத்தி வருகிறார். இவற்றுடன், அந்த பகுதியில் 40 க்கும் மேற்பட்ட கடைகளை கட்டி, வாடகைக்கு விட்டு வருகிறார். இவருக்கு 40 கடைகளின் வாடகை பணம் உள்ளிட்ட பல வகைகளில், வருமானம் எப்போதும் கை இருப்பில் இருந்துகொண்டே இருக்கும்.

இதனை தெரிந்துகொண்ட அதே பகுதியைச் சேர்ந்த தண்ணீர் கேன் வியாபாரம் செய்யும் மைக்கேல் மற்றும் அவரது நண்பர்களான நவராஜா, ஷாம், பிரகாஷ், ஆகியோர் ஒன்று சேர்ந்து இந்த கிருஷ்ணன் வீட்டில் கொள்ளையடிக்கவும் திட்டம் போட்டு உள்ளனர்.

அதன் படி, கிருஷ்ணன் எங்கு செல்கின்றார்? எப்போது வருகிறார்? என்று, அவரை தினந்தோறும் நோட்டமிட்டு வந்துள்ளனர். 

இந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி கிருஷ்ணன் அவரது கடையில் பணியில் இருந்த போது, 7 பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டிற்கு காரில் வந்து, “வீட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக்கொண்டிருந்த அவரது மகளையும், மனைவியையும் கத்தி முனையில் மிரட்டி, அந்த வீட்டில் கொள்ளையடிக்க முயன்று உள்ளது. 

ஆனால், அதற்குள் கிருஷ்ணனின் மகன் வீட்டிற்கு வந்து உள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த திருட்டு கும்பல், வீட்டில் இருந்த 50 ஆயிரம் பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோட முயன்று உள்ளது. 

ஆனால், அதற்குள் கொள்ளையர்களை அடையாளம் கண்ட அப்பகுதி மக்கள் அங்கு திரண்ட்டு வந்து, இந்த கொள்ளையர்களின் கார்களை தாக்கி உள்ளனர். ஆனாலும், கொள்ளையர்கள் இந்த காரில் தப்பித்து சென்று உள்ளனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணன், கொள்ளை சம்பவம் தொடர்பாக ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் 
பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தினர். அதன்படி, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தீவிரமாக விசாரணையை நடத்தின்.

இந்த விசாரணையில், “இந்த திருட்டு கும்பல், இதே போன்று தொழிலதிபர் ஒருவரை கடத்தி கொள்ளையடிக்க முயன்றது தெரிய வந்தது. அத்துடன், இந்த 2 சம்பவத்திலும் ஈடுப்பட்டது ஒரே காரில் வந்த கொள்ளை கும்பல் தான்” என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். 

அதன் படி, சிசிடிவி காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை அடையாளம் கண்ட போலீசார், கொள்ளையில் ஈட்டுப்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள் சாம் பிரகாஷ், சுனில் மற்றும் விஜயகுமார், மதன், விஜய், கமலகண்ணன் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

மேலும், கிருஷ்ணன் வீட்டில் அதிக அளவு எப்போதும் பணம் வைத்திருப்பதாகத் தகவல் கிடைத்ததாகவும், அவரது வீட்டில் கொள்ளையடித்தால் செட்டில் ஆகிவிடலாம்” என்றும், திட்டம் போட்டு உள்ளனர்.

அத்துடன், இவர்கள் இதற்கு முன்பு பல இடங்களில் திருடியதும், தற்போது இந்த திருட்டு பற்றி அவர்களுக்குள் பகிர்ந்துகொண்ட வாட்ஸ்ஆப் சைட்டிங் மற்றும் இவர்களுக்குள் இந்த திருட்டு சம்பங்கள் பற்றி பெருமையாக பேசிக்கொண்டதும்” போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

குறிப்பாக, இந்த கொள்ளைக்குத் திட்டம் போட்டு கொடுத்த கொள்ளை கும்பலின் தலைவன் தற்போது தலைமறைவாக உள்ளதால், அவனைப் பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.