கடந்த ஒரு வருடமாகக் காதலித்து வந்த 17 வயதுடைய சிறுவர் - சிறுமிகளை பாலியல் உறவுக்குத் தூண்டிய சிறுமியின் தாயை, போலீசார் அதிரடியாகக் கைது செய்து உள்ளனர். 

சென்னை புழல் கதிர்வேடு பகுதியைச் சேர்ந்த 43 வயதான ஸ்டீபன் டேவிட் என்பவர், ஆட்டோ ஓட்டுநரானக வேலை பார்த்து வருகிறார். இவர், தனது மனைவி மற்றும் தன்னுடைய இரு பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.

இவரின் 17 வயதான இளைய மகன் சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியைக் கடந்த ஒரு வருடமாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இதனால், அந்த 17 வயது சிறுவன், அடிக்கடி வியாசர்பாடியில் உள்ள தனது 17 வயது சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று, அந்த சிறுமியைச் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், அந்த 17 வயது சிறுமி, தனது தாயாருடன் அங்கு வசித்து வந்தார். அவருக்குத் தந்தை இல்லை என்றும் கூறப்படுகிறது.

இப்படியான சூழ்நிலையில் தான், ஆட்டோ ஓட்டுநரான ஸ்டீபன் டேவிட்டின் 17 வயது இளைய மகன் திடீரென்று மாயமானார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுவனின் தந்தை ஸ்டீபன் டேவிட், தனது மகனை அந்த பகுதி முழுவதும் தேடிப் பார்த்து, மகனின் நண்பர்கள் வீடுகளுக்கும் சென்று தேடிப் பார்த்து உள்ளார். 

எங்கும் தேடியும் மகன் கிடைக்காத நிலையில், “17 வயதான இளைய மகனை காணவில்லை” என, புழல் காவல் நிலையத்தில் ஸ்டீபன் டேவிட் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தினர். போலீசாரின் இந்த விசாரணையில், ஆட்டோ ஓட்டுநரான ஸ்டீபன் டேவிடின் 17 வயதான இளைய மகன், வியாசர்பாடியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தது முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர், சிறுமியின் தாயின் தூண்டுதலின் பேரில் அவர்கள் 3 பேருமாக சேர்ந்து பெங்களூருக்குச் சென்றதும் தெரிய வந்தது.

இதனையடுத்து, பெங்களூருக்கு விரைந்துச் சென்ற போலீசார், அங்கிருந்து 3 பேரையும் மீட்டு சென்னை அழைத்து வந்தனர். சென்னையில், அவர்கள் 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணையில், “17 வயது சிறுவன், அந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்த நிலையில், சிறுமியின் தாயார் தூண்டுதலின் பேரில், அவர்கள் பெங்களூருவில் ஒரு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கி வந்ததும், இல்லற உறவிற்குச் சிறுவர் - சிறுமிகளை அந்த சிறுமியின் தாயார் தூண்டியதும்” விசாரணையில் தெரிய வந்தது.

“தாயாரின் தூண்டுதலின் பேரில், சிறுவர் - சிறுமியர் இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டு வந்ததும்” தெரிய வந்தது.

இதனையடுத்து 3 பேரையும் மாதவரம் நீதிபதி முன்னிலையில் முன்னிறுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “சிறுவர்களை மன ரீதியான ஆலோசனை வழங்குவதற்காகவும், மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதற்காகவும் சிறார் காப்பகத்திற்கு” அனுப்பி வைத்தனர். 

மேலும், சிறுவர்களை பாலியல் உறவுக்குத் தூண்டியதற்காகச் சிறுமியின் தாயாரை சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.