வேறொரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டதைத் தெரிந்துகொண்டு, திருமணத்தன்று மணமகனை அறைந்த மணப்பெண், தனது பெற்றோர் வீட்டிற்கு அப்படியே கிளம்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டம் குத்தான் என்ற லாவியன் கிராமத்தில் நேற்றைய தினம் இரு வீட்டார் முறைப்படி திருமணம் நடந்து உள்ளது.

இதனையடுத்து, புதிதாகத் திருமணமான மணமகள், தனது மாமியார் வீட்டிற்கு காரில் வந்து இறங்கினார். அப்போது, அங்கு நின்றுகொண்டு இருந்த மணமகனை திடீரென்று கண்ணத்தில் அறைந்து உள்ளார். 

இதனால், அந்த இடமே அப்படியே மயனா அமைதியானது. இதனையடுத்து, அந்த மணமகள் தனது திருமண உடைகளை மாற்றி விட்டு, மிகவும் சாதாரண உடையுடன், அங்கிருந்து தனது பெற்றோரின் வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றார். இதனைப் பார்த்த அங்கிருந்த அனைவரும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

பெண், வீடு திரும்பியதும் கடும் அதிர்ச்சியடைந்த பெண்ணின் பெற்றோர், “என்ன நடந்தது?” என்று, மணமகனின் வீட்டாரிடம் விசாரித்து உள்ளனர்.

அதனால், இரு வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் ஏற்பட்டது.

அத்துடன், இரு தரப்பினரும் நடந்த இந்த விசயத்தைப் பற்றி அங்குள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்து உள்ளனர். இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இரு தரப்பினரிடமும் விசாரித்து உள்ளனர்.

இந்த விசாரணையில், “இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்ற நிலையில், திருமண ஊர்வலம், சடங்குகளில் மணப்பெண் உற்சாகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மணமகனின் குடும்பத்தினர் மணப்பெண்ணை வீட்டிற்குள் அழைத்துச் செல்ல இருந்தபோது, அவர் மணமகனை அறைந்து உள்ளார்.

குறிப்பாக, மணமகன் ஏற்கனவே வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளது அப்போது தான் அந்த பெண்ணிற்குத் தெரிய வந்தது. இந்த செய்தி அறிந்த மணப்பெண், மாப்பிள்ளையை அந்த ஊரார் முன்னிலையில் கண்ணத்தில் அறைந்தது” தெரிய வந்தது. 

அப்போது, போலீசார் சமாதானம் கூறியும் மணமகன் செய்த தவற்றை, அந்த பெண் மன்னிக்கவே இல்லை. இதனால், போலீசாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 

இதனிடையே, திருமணம் நடைபெற்ற அன்றே தம்பதிகள் இருவரும் பிரிந்து சென்ற சம்பவம், அந்த மாநிலம் முழுவதும் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.