புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தென்னாப்பிரிக்காவில் தான் வேகமாக பரவி வருகிறது. 


கொரோனா நோயை உருவாக்கும் சார்ஸ் கோவ்ட் -2 வைரஸ் தான், தற்போது உருமாறி இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைரஸுக்கு B.1.351 என்று பெயர் வைத்துள்ளனர். கொரோனா வைரஸை விட அதிக வேகமாக பரவி வருகிறது என்று மருத்துவ உலகம் கவலை தெரிவித்துள்ளது.


மேலும் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கும் இந்த உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகம் ஏற்படுகிறது. தென்னாப்பிரிக்காவில்  தடுப்பூசிகளுக்கான பரிசோதனை நடைப்பெற்று வருகிறது. இருப்பினும் பரிசோதனையில் இருக்கும் தடுப்பூசிகள் இந்த உருமாறிய கொரோனாவை எதிர்க்கொள்ள குறைவான திறனையே பெற்றுள்ளது என தென்னாப்பிரிக்கா அரசாங்கம் வேதனை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை சரியாக கடைப்பிடிக்காதவரை உலகில் இந்த தொற்று ஒழிய வாய்ப்பில்லை என்றார்கள் உலக சுகாதார நிறுவனம்.