அணு ஆயுத கப்பல் தளத்தில் காதலனுடன் ஆபாச வீடியோ எடுத்துக்கொண்ட பெண் கடற்படை அதிகாரியால், அந்நாட்டின் மொத்த ராணுவ அதிகாரிகளும் 
அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

ஸ்காட்லாந் நாட்டில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது. 

ஸ்காட்லாந் நாட்டைச் சேர்ந்த கிளாரி ஜென்கின்ஸ் என்ற பெண் அதிகாரி ஒருவர், அங்குள்ள கிளாஸ்கோ என்னும் பகுதி அருகேயுள்ள ரகசிய அணு ஆயுத தளத்தில் அமைந்துள்ள நீர்மூழ்கிக் கப்பலில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

பெண் உயர் அதிகாரியான கிளாரி ஜென்கின்ஸ், தன்னுடன் பணியாற்றும் லியாம் என்ற இளைஞரை அவர் காதலித்து வந்திருக்கிறார். 

அதே நேரத்தில், அவர்கள் பணியாற்றுவது ரகசிய அணு ஆயுத தளத்தில் அமைந்துள்ள நீர்மூழ்கி கப்பல் என்பதால், அங்கு செல்போன் மற்றும் வீடியோ, புகைப்படம் எடுப்பது தொடர்பான எந்த பொருட்களையும் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், காதலர்களான பெண் உயர் அதிகாரியான கிளாரி ஜென்கின்ஸ், காதலன் லியாமும் இணைந்து, குறிப்பிட்ட அணு ஆயுத தளத்தில் அமைந்து உள்ள நீர்மூழ்கிக் கப்பலுக்குள் வைத்து, ஆபாசமான வீடியோக்களை படமெடுத்து உள்ளனர். 

முக்கியமாக, இந்த ஆபாச வீடியோக்களை அவர்கள் “Only Fans” என்ற, இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து உள்ளனர். இதன் மூலமாக, பணமும் சம்பாதித்து வந்து இருக்கிறார் பெண் உயர் அதிகாரியான கிளாரி ஜென்கின்ஸ்.

குறிப்பிட்ட அந்த இணைய தளத்தில் மிகவும் அதிகமான பயனாளர்கள் அவர்களுக்கு உள்ளனர். காதலன் லியானுடன் இணைந்து இது போன்று ஆபாச வீடியோக்களை சம்மந்தப்பட்ட அந்த ரகசிய தளத்திற்குள் வைத்து அதிக முறை எடுப்பதை அந்த பெண் உயர் அதிகாரி வழக்கமாகக் கொண்டிருக்கிறார். 

இந்த நிலையில், பெண் உயர் அதிகாரியான கிளாரி ஜென்கின்ஸ் குறித்த இந்த செயல்பாடுகள் அவருக்கும் மேலே இருக்கும் பிற உயர் அதிகாரிகளுக்கும் தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த அந்த அதிகாரிகள் இந்த தகவலை உயர் ராணுவ தலைமையிடம் கொண்டு சென்றனர். இதனால், அந்நாட்டின் உயர் ராணுவ அதிகாரிகளும் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

அதாவது, “அணு ஆயுத கப்பல் தளம் என்பது, ஒரு நாட்டின் மிக முக்கியமான பல ரகசியங்களைக் காப்பதற்கான இடமாக இருந்து வருகிறது. அப்படிப்பட்ட ரகசியம் காக்கும் இடத்தில், ஒரு கடற்படை உயர் அதிகாரியான பெண் ஒருவர், எப்படி தன்னுடைய காதலருடன் இணைந்து, போன் அல்லது கேமராவை பயன்படுத்தி இப்படியான மிகவும் ஆபாச படங்களை எடுத்தார்” என்பது தான், அதிகாரிகள் குழப்பமடையச் செய்து உள்ளது. 

முக்கியமாக, அந்த அணு ஆயுத கப்பல் தளத்தில் யாராக இருந்தாலும், அவர் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே சம்மந்தப்பட்ட அந்த கப்பலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இப்படியான நிலையில் தான், “இந்த காதல் ஜோடி எப்படி உள்ளே கேமரா உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்று படம் பிடித்தார்கள்?” என்பது பெரும் கேள்வியை சக ராணுவ அதிகாரிகள் மத்தியில் எழுப்பி உள்ளது.

குறிப்பாக, அந்நாட்டின் ராணுவம் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எழுந்துள்ள பெரிய கேள்வி என்னவென்றால், “ஒரு நாட்டின் மிகவும் பாதுகாப்பான இடமாகக் கருதப்படும் ஒரு பகுதியில் வைத்து இவர்கள் படம் பிடித்த ஆபாச காணொளிகளைக் கொண்டு, வெளிநாட்டு முகவர்கள் யாரேனும், அந்த ஜோடியை மிரட்டி, 

நாட்டின் ரகசியத் தகவல்களை வாங்க முற்படுவார்களோ?” என்று சந்தேகப்படுகின்றனர். இதனால், இந்த காதல் ஜோடி தற்போது அந்நாட்டின் உயர் அதிகாரிகளின் விசாரணை வலையத்திற்குள் வந்து உள்ளனர். இச்சம்பவம், அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.