பொதுவாக ஒரு வருடத்தில், நடக்கும் சம்பவங்கள் சிறப்பானதாக இருந்தால் அது வரலாற்றில் இடம்பெறும். ஆனால் ஒரு மொத்த வருடமே, வரலாற்றின் பொன்நிறத்தில் பொறிக்கப்பட வேண்டும் என்றால் அது நிச்சயம் 2020-ஆக தான் இருக்கும். இந்த வருடம் போல் மனித குலத்தையே வச்சு செஞ்ச வருடம் இதுக்கு முன்பு இல்லை. 2020-யை ரீவைண்ட செய்தால் அதில் அதிகப்படியான துக்க சம்பவங்களே நிறைந்து இருக்கிறது என்றாலும் இந்த வருடத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளுக்கு ஒரு ரவுண்ட் போயிட்டு வருவோமா.. 


ஜனவரி - 8 வருடத்தின் தொடக்கத்துலையே அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதல் உச்சபட்சமாக இருந்தது. இதில் ஈரானின் புரட்சிப்படை தளபதி காசிம் சுலைமானி..  அமெரிக்கவின் ஆளில்லா விமான தாக்குதலினால் கொல்லப்பட்டார். இதன்பின்  உக்ரைன் நாட்டு விமானத்தின் மீது ஈரான் பாதுகாப்பு படையினர்.. அமெரிக்க போர் விமானம் என நினைத்து தவறுதலாக நடத்திய ஏவுகணை தாக்குதலில், உக்ரைன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 176 பயணிகள் நியாயமாக கொல்லப்பட்டனர்.

ஜனவரி-18 ஏமன் உள்நாட்டு போரில் பாதுகாப்பு படையினர் 111 பேர் உள்பட மொத்தம் 116 பேர் கொல்லப்பட்டனர்.


ஜனவரி-30  சீனாவில் கண்டறியப்பட்ட கொரானா வைரசால் சர்வதேச அளவிலான பொதுசுகாதார அமைப்பு அவசரநிலையை உலக சுகாதார அமைப்பு பிரகடனம் செய்தது. 


பிப்ரவரி-11  கொரோனா வைரசுக்கு covid-1 என்று உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாக பெயர் வைத்தது.

பிப்ரவரி-23  குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டம் டெல்லியில் பெரிய அளவில் நடந்தது. போராட்டம் வன்முறையில் முடிந்து காவல்துறை நடத்திய தடி அடியில்  53 பேர் உயிரிழந்தனர்.

பிப்ரவரி- 29 ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட தலிபான் - அமெரிக்கா இடையே அமைதிக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. 

மார்ச் 11-  உலக சுகாதார அமைப்பு  கொரோனா வைரஸ் ஒரு பெருந்தொற்று என்று அறிவித்தது. 
8) மார்ச்- 22 எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தொகுப்பாளர் என பல முகங்களை கொண்ட விசு காலமானார்.

மார்ச் 26 - கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியாவில் முதல் முறையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பரவலால்  சண்டையை நிறுத்துமாறு ஐ.நா விடுத்த கோரிக்கை சிரியா, ஏமன், லிபியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் உள்ள உள்நாட்டு போராளி குழுக்கள்  ஏற்றுக்கொண்டு அமைதிக்கு ஒத்துழைத்தது.

மார்ச்- 26 நடிகர் மற்றும் தோல் மருத்துவ நிபுணர் சேதுராமன் மாரடைப்பால் இறந்தார். 


ஏப்ரல்-1 கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஏமன் அரசு 470 சிறைக்கைதிகளை விடுதலை செய்தது.

ஏப்ரல்- 14 கொரோனா பரவல் குறித்த தகவலை மறைத்ததாக  உலக சுகாதார அமைப்பு மீது குற்றம் சாட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்த அமைப்புக்கு வழங்கிவந்த நிதியை  நிறுத்தினார்.


ஏபரல்- 29  பாலிவுட் நடிகர் இர்பான் கான் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார். 

மே-7 இந்தியாவின் ஆந்திரபிரதேசம் மாநிலம் விசாகபட்டினத்தில் எல்ஜி பாலிமர்ஸ் கெமிக்கல் நிறுவனத்தில் ஏற்பட்ட விஷவாயு கசிவினால் 11 பேர் உயிரிழந்தனர்.


மே-21 இந்தியாவில் உருவான அம்பன் புயல் இந்திய-வங்காளதேச கடல் எல்லையில் கரையை கடந்தது. இந்த புயலால் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.


மே-25  ஒரு கடையில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் ( George Floyd)  சிகரெட் வாங்கியபோது, அவர் கொடுத்த 20 டாலர் பணம் கள்ளநோட்டு என சந்தேகித்த கடைக்காரர், போலீஸாருக்கு தகவல் கொடுக்க , கைது நடவடிக்கையின் போது ஜார்ஜ் அமெரிக்காவில். இந்த சம்பவத்தால் நிறவெறிக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. #Blacklivesmatter என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டானது. 

ஜூன்-15  இந்திய-சீன வீரர்களுக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். 

ஜூன் - 14  பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
 

ஜூலை.15  அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, பிரதமர் மோடி,  பில் கேட்ஸ் உள்பட பிரபலமான நபர்களின் ட்விட்டர் கணக்குகள்  ஹேக் செய்யப்பட்டது.

ஜூலை-19  பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் இந்தியா மற்றும் நேபாளத்தை சேர்த்து மொத்தம் 189 பேர் உயிரிழந்தனர்.


ஆகஸ்ட்-4 லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரில் உள்ள துறைமுகத்தில் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் ஏற்பட்ட வெடிவிபத்தில் 220 பேர் உயிரிழந்தனர். 3 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.


ஆகஸ்ட்-7  கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கு போது ஓடுதளத்தை விட்டு விலகி சென்று விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்தனர். 

ஆகஸ்ட்-11 உலகின் முதல் கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிக் விக்கு ரஷியா அனுமதி அளித்துள்ளதாக அதிபர் புதின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

 

ஆகஸ்ட்-18  1,000 டன் கச்சா எண்ணெய் ஏற்றிவந்த ஜப்பான் நாட்டுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் மொரிசீயல் தீவுவில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் கப்பலில் இருந்த கச்சா எண்ணைய் கடலில் கலக்க தொடங்கியது. 


செப்டம்பர் - 4 கொசோவா - செர்பியா நாடுகளுக்கு இடையே பொருளாதார ரீதியில் சுமூக உறவு ஏற்பட்டது. இதனால் இரு நாடுகளும் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் வகையில் தூதரகங்களை ஜெருசலேமிற்கு மாற்றம் செய்யப்பட்டது.


செப்டம்பர்- 10 பிரபல சின்னத்திரை நகைச்சுவை நடிகர் வடிவேல் உடல்நல குறைவால் மறைந்தார். 


செப்டம்பர்- 25 இந்தியா முழுவதும் உள்ள வீடுகளில் கேட்கப்பட்ட ஒரு மெல்லிசை குரலின் சொந்தகாரர் எஸ்.பி.பி கொரோனா பாதிப்பில் காலமானார்.


அக்டோபர் - 23 இஸ்ரேல் - சூடான் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி உடன்படிக்கை எட்டப்பட்டது, பதட்டமான சூழல் தணிந்தது. 


அக்டோபர்- 29 அகதிகள் படகு கவிழ்ந்து 140 பேர் செனகல் நாட்டின் உயிரிழந்தனர்
 

நவம்பர் - 4  அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக பாரிஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கையில் இருந்து விலகியது.

நவம்பர்- 7 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

நவம்பர்- 12, ஹாங்காங் நாடாளுமன்றத்தில் இருந்து ஜனநாயக ஆதரவு உறுப்பினர்கள் அனைவரும் மொத்தமாக ராஜினாமா செய்தனர். 

நவம்பர்- 26, இந்தியாவின் மத்திய பாஜக அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தை தொடங்கினர். 


நவம்பர்- 27 ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே தெஹ்ரான் நகரில் சென்று கொண்டு இருந்தப்போது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

நவம்பர்- 11 புற்றுநோய்பாதிப்பால் நகைசுவை நடிகர் தவசி இறந்தார்.


நவம்பர்-30  லட்சகணக்கான விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியை செல்ல தொடங்கினர். 


டிசம்பர் - 3 கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர முதல் நாடாக இங்கிலாந்து அனுமதித்தது. 


டிசம்பர்-14 அமெரிக்காவின் மக்கள் பயன்பாட்டிற்கு , பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தது.


இது தான் இந்த 2020. கொரோனா வேகத்தடை எல்லாத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. ஊரடங்கால் பல பொருளாதார இழப்புகள், தொழில் நலிவுகளைச் சந்தித்து இருக்கிறோம். உலகளவில் கொரோனா தடுப்பூசி கண்டுப்பிடிப்பு பணிக்கள் முடியும் வேளையில் , கொரோனா 2.O தலைகாட்டுகிறது. மீண்டும் ஒரு கொல்லை நோய்க்கு லட்சகணக்கான உயிர்களை இழக்காமல் , ஊரடங்கில் முடங்காமல்.. கவனமாக இதையும் கடந்து, மீண்டு செல்வோம் என நம்புவோம். அதுவரை சமூக இடைவெளி, முக கவசம், சுகாதாரம் ஆகியவற்றை மறக்காமல் பின்பற்றி, 2021ம் ஆண்டு ஆரோக்கியமாகவும், சந்தோசமாகவும் அமைய அனைவருக்கும் கலாட்டா நிறுவனத்தின் சார்ப்பாக வாழ்த்துக்கள்! Be Safe ! Wising you a very Happy New year :)