மருத்துவமனையில் பணியாற்றும் சுகாதார ஊழியர் ஒருவர், கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து தனது காதலை காதலியிடம் வெளிப்படுத்திய நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.

இத்தாலி நாட்டில் தான், இப்படியான ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று அரங்கேறி இருக்கிறது.

உலகையே ஆட்டிப் படைத்து வரும் இந்த கொரோனா காலகட்டத்தில் எந்த அளவுக்கு மிகவும் பரிதாபமான சம்பவங்கள் எல்லாம் நிகழ்ந்து வருகிறதோ, அந்த அளவுக்கு உலகின் சில இடங்களில் சில சுவாரஸ்யமான சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. அப்படியான ஒரு காதல் சுவாரஸ்யமான சம்பவம் தான், இத்தாலியில் நடைபெற்ற இந்த சம்பவமும் பார்க்கப்படுகிறது.

இந்த உலகில் தன் காதலியிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் இளைஞர்களும் சரி, இளம் பெண்களும் சரி, எப்போதுமே புதிது புதிதான யுக்திகளையே கையாள்வார்கள். இப்படிதான், கடந்த காதல் காதல் கதைகள் எல்லாம் இவ்வுலகில் நிகழ்ந்திருக்கின்றன. 

அதிலும் குறிப்பாக, சிலர் தனக்குப் பிடித்த பெண்களை மிகவும் உயரமான இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து தன்னுடைய காதலை வெளிப்படுத்துவது உண்டு. 

சமீபத்தில் கூட, இந்தியா - ஆஸ்ரேலியா போட்டிகள் நடைபெற்ற கிரிக்கெட் மைதானத்தில் ஒரு ஜோடி, தங்களது காதலை வெளிப்படுத்தியது, உலகம் முழுவதும் வைரலானது. இப்படியாக பல்வேறு வித்தியாசமான காதல் கதைகளை நாம் கேட்டு, கேள்விப்பட்டதுண்டு. 

அப்படியான ஒரு வித்தியாசமான முறையில் தான், அதுவும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வரும் ஒரு பரபரப்பான மருத்துவமனையில் பணியாற்றும் ஒரு சுகாதார ஊழியர் ஒருவர், தான் காதலிக்கும் பெண்ணிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்த மிகவும் ஒரு வித்தியாசமான முறையை கையாண்டு, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். 

அதாவது, இத்தாலி நாட்டில் உள்ள புக்லியாவில் செயல்பட்டு வரும் ஒஸ்டுனி மருத்துவமனையில் கியூசெப் புங்கேண்டே என்ற இளைஞர், சுகாதார ஊழியராக 
பணியாற்றி வருகிறார். சுகாதார ஊழியரான கியூசெப் புங்கேண்டே, குறிப்பிட்ட அந்த மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கொரோனா வார்டில் பணியாற்றி வந்தார். 

முக்கியமாக, தனது கடினமான பணிக்கு மத்தியில் தன்னுடைய காதலிக்கும், தனது காதலியிடம் காதலை வெளிப்படுத்த ஒரு வித்தியாசமான முறையைக் கையாள திட்டமிட்டார். இதற்காக, அந்த இளைஞர் அணிந்திருந்த கொரோனா பாதுகாப்பு உடையின் பின்புறம், “கார்மெலி, என்னை திருமணம் செய்து கொள்கிறாயா?” என்று குறிப்பிட்டு, “ஆம் மற்றும் இல்லை” என எழுதி, அதனை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

இப்படியான காதலின் காதல் சுவாரஸ்யமான புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில், அந்நாட்டின் பலரும் இதற்கு பல்வேறு சுவாரஸ்யமான கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர். இதில் சிலர், அந்த பெண்ணை காதலிக்கச் சொல்லி ரெபர் செய்தனர். சில பெண்கள், “நான் உங்களை காதலிக்கலாமா?” என்பது போன்றும், பதில்களை அளித்து வந்தனர். 

மேலும், அந்த சுகாதார ஊழியரின் கோரிக்கைக்கு பதில் அளித்துள்ள சம்மந்தப்பட்ட அந்த இளம் பெண்ணான கார்மெலி, காதலை ஏற்றுக்கொள்வதாக “ஆம்” என்று, அதில் பதில் அளித்துள்ளார்.

இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு இடையே, தனது அயராத பணியிலும் தன் காதலியிடம் காதலை வெளிப்படுத்திய சுகாதார ஊழியருக்குப் பலரும் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்வு, இணையத்தில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.