நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் திமுகவில் இணைந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்திக்கு திமுகவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.


நாம் தமிழர் கட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் ராஜீவ் காந்தி. நாம் தமிழர் கட்சியிலிருந்து ராஜீவ் காந்தியும், கல்யாண சுந்தரமும் முன்னதாக வெளியேறி இருந்தனர். அதன்பிற்கு கல்யாண சுந்தரம் அதிமுகவில் இணைந்தார்.  ராஜீவ் காந்தி திமுகவில் இணைந்தார்.


இதனையடுத்து திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன், ராஜீவ் காந்தியை திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளராக நியமித்துள்ளார்.