சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அதிமுக தேர்தல் பரப்புரை பணிகளை தொடங்கி வைக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஓ.பி.எஸ், ‘’ எளிய மக்களின் வாழ்க்கத்தரம் உயர அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. 


தமிழகத்திற்கு நலத்திட்டங்களை பெறும் நோக்கத்திற்காகவே மத்திய அரசை ஆதரிக்கிறோம்.  மத்திய அரசில் அதிமுக அங்கம் வகிக்காவ்வில்லை. ஆனால்  பல்வேறு நலத்திட்டங்களை தமிழக்கத்துக்கு பெற்று தந்துயிருக்கிறோம். அதில் ஒன்று எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகம் வந்து சேர்ந்திருக்கிறது. 


ஹைட்ரோகார்பன் திட்டத்தில் கையெழுத்திட்டது திமுக. ஆனால் தஞ்சையை வேளாண் மண்டமாக அறிவித்தது அதிமுக தான். எந்த கெட்டப் பெயரும் இல்லை. தொண்டனின் உழைப்பு, சிந்திய ரத்தம் வரலாற்றில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதிமுகவில் சாதாரண தொண்டனாக இருப்பது கூட பெருமைக்குரியது. ’’ என்று ஓ.பி.எஸ் தெரிவித்து இருக்கிறார்.