#தமிழகம்_முதலிடம் என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் ட்விட்டரில் இன்று ட்ரெண்டிங்கில் உள்ளது.


இந்தியாவில் தமிழகம் பல துறைகளில் முன்னணியில் இருப்பதாக பல்வேறு தரவுகளுடன் #தமிழகம்_முதலிடம் என்ற ஹேஷ்டாக் அதிமுகவினர் பதிவிட்டு வருகிறார்கள். தமிழகத்தில் கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக தொடர்கிறது , இந்த 9 ஆண்டு கால ஆட்சியில்  ஜவுளித்துறை, ஆட்டோ மொபைல், உயர்கல்வி, உள்நாட்டு உற்பத்தி போன்ற பல துறைகளிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என அதிமுகவினரால் ட்விட்டரில் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. 


மேலும் கொரோனா சூழலில் அதிமுக மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் அவர்கள்  கொண்டுவந்த திட்டங்கள் உள்ளிட்ட தகவலகள் சேர்த்த பதிவுகளையும் அதிகளவு பதிவிட்டு வருகின்றனர். 


’’ தமிழக அரசின் ரேசன் பொருட்கள் மக்களுக்கு எளிதாக சென்றடைய தமிழகம் முழுவதும் 3,501 அம்மா நகரும் நியாய விலைக் ‌கடைகள், மக்களின் வீட்டு வாசலிலேயே சேவை. ‘’ , தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் என உயர்கல்வியில் முதலிடம்,உள்நாட்டு உற்பத்தியில் அசுர வளர்ச்சி, கொரோனா தொற்றிலிருந்து நாட்டிலேயே அதிகமாக 95% பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது என அனைத்து துறைகளிலும் #தமிழகம்_முதலிடம் ” என்று பதிவிட்டு வருகிறார்கள்.