மதுரை நரிமேட்டில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா திறந்து வைத்தார். அப்போது பத்திரிகையாளர்களை சந்திப்பில் பேசிய அவர், ’’ முதல்வர் வேட்பாளர் தொடர்பாக எல். முருகன் தெரிவித்த கருத்து அவருடைய சொந்த கருத்து மட்டும் தான். அதிமுக தலைமையில் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளே அதிமுக கூட்டணியில் இடம் பெறும். 2500 ரூபாய் பொங்கல் சிறப்பு பரிசால் அதிமுகவின் வாக்கு சதவீதம் மேலும் 10 சதவீதம் உயர்ந்து 70 சதவீதமாகும்.


திமுக நடத்தும் கிராம சபை கூட்டத்தால் ஒரு பயனும் இல்லை. அவர்கள் நடத்தும் கூட்டம் செயற்கையானது. கட்சி கூட்டத்துக்கு யாரும் வராததால் கிராம சபை கூட்டத்தை ஸ்டாலின் கூட்டி வருகிறார். மு.க.அழகிரி கட்சி துவங்கினால் திமுக தான் பெரிதும் பாதிக்கப்படும். மு.க.அழகிரியால் மற்ற கட்சிகளுக்கு எந்த பாதிப்பும் வராது. 


சீமான், எம்.ஜி.ஆர் குறித்து தவறாக பேச மாட்டார். வேறு சில உள்நோக்கத்துடன் தான் சீமான் எம்.ஜி.ஆரை விமர்சனம் செய்கிறார். இனிமேல் விமர்சனம் செய்ய மாட்டார் என நம்புகிறோம்.” என்றார்.