பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் 83-வது நாளான இன்று சனிக்கிழமை என்பதால் வீட்டிற்கு கமல்ஹாசன் வந்திருக்கிறார். இந்த வாரம் முழுவதும் நடந்த சம்பவங்கள் பற்றி அவர் பேசி இருப்பது இன்றைய முதல் ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு இருந்தது. இன்னும் மூன்று வாரம் தான் இருக்கிறது. அவங்க தப்பை அவர்கள் உணர்த்தார்களோ இல்லையோ. நீங்க நல்ல புரிந்து வெச்சிருக்கீங்க என்பது நீங்கள் ஓட்டு போடும் முறையிலேயே தெரிகிறது. 

மக்கள் தீர்ப்பு தான் இறுதியானது என அவர்களும் உணரும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என கமல் கூறியிருந்தார். பிக் பாஸ் வீட்டில் அனிதா செய்த தவறு தான் இன்று பேசுபொருளாக இருக்க போகிறது என்பதை ரசிகர்கள் கணித்தனர். இந்நிலையில் சற்றுமுன் இன்றைய இரண்டாவது ப்ரொமோ வீடியோ வெளிவந்து உள்ளது. அதில் அனிதா பருப்பு ஊறவைத்துவிட்டு அதை சமாளிக்க எதேதோ கூறியது பற்றி கமல் கேட்டிருக்கிறார்.

ஒளவையார் போல பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவர்..என பேச தொடங்கிய கமல், 'தப்பா சொல்லிடனோ. இந்த பருப்பு மேட்டரு கொண்டு வந்திருக்க கூடாது என கிண்டலாக சொல்கிறார். அதன் பின் பாலாஜி என்ன நடந்தது என சம்பவத்தை விவரிக்க தொடங்குகிறார். உடனே கமல் நாங்க பாத்துட்டோம் அதை, தெரியாமல் கேட்கவில்லை என சொல்கிறார்.

It happens என அசால்ட்டாக அனிதா சொன்னது எனக்கு பிடிக்கவில்லை என பாலாஜி குற்றம்சாட்டுகிறார். உடனே விளக்கம் கொடுத்த அனிதா., சாம்பார் வைக்க கடலைபருப்பை ஊற வைத்துவிட்டோம் என நினைத்து அதை அப்போதே கொட்டி இருக்கலாம். ஆனால் அடுத்து வடை செய்வதற்கும், கூட்டு செய்வதற்கும் பிளான் செய்து வெச்சிருந்தோம் என சொல்கிறார். உடனே கமல் நீங்க அதெல்லாம் செய்வீங்களா? என கேட்டுவிட்டார். இப்படி ஒரு நோஸ்கட் வரும் என்று அனிதா எதிர்பார்த்து இருக்க மாட்டார்.