கோவை மதுக்கரை ஒன்றியத்திற்கு உட்பட்ட மலுமிச்சம்பட்டியில் திமுக சார்பாகக் கிராம சபைக் கூட்டம் நடைப்பெற்றது. இதில் கலந்துக்கொண்ட திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி, “  திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தவாறு,  தமிழ்நாடு முழுவதும் வரும் ஜனவரி 10ஆம் தேதி வரை திமுக சார்பில் 16 ஆயிரம் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும்.  இந்த அராஜக ஆட்சி, ஊழல் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும். அதிமுக ஆட்சியை ஒழிக்கவே திமுக இறங்கியுள்ளது. 


அமைச்சர் எஸ்பி வேலுமணி செய்த  ஊழல்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து வருகிறோம். அவரகளின் ஊழல்களை மக்களிடம் விளக்கும் வகையில் கிராம சபைக் கூட்டங்களை நடத்தி வருகிறோம். அதிமுக அமைச்சர்களின் ஊழல்கள் குறித்து திமுகவினர் வீடு வீடாக சென்று பரப்புரை மேற்கொள்ள இருக்கிறோம்.  

அதிமுகவை வீழ்த்த வரலாறு காணாத எழுச்சி மக்கள் மத்தியில் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த எழுச்சி ஆட்சி மாற்றத்திற்கான அடையாளமாகவே தெரிகிறது” என்று தெரிவித்து இருக்கிறார்.