தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ப்ரியா பிரின்ஸ்.செய்தி வாசிப்பாளராக இருந்து வந்தவர் என் பெயர் மீனாட்சி என்ற தொடரின் மூலம் சீரியல்களில் நடிக்கத்தொடங்கினார்.தொடர்ந்து மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா இணைந்து நடித்த மாப்பிள்ளை தொடரில் முக்கிய வேடத்தில் நடித்த இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானாவாராக மாறினார்.

இதனை தொடர்ந்து விஜய் டிவியின் பிரபல தொடர்களில் ஒன்றான தமிழ் கடவுள் முருகன் தொடரில் பார்வதியாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார் ப்ரியா.தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வந்தார்.பசங்க 2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார் ப்ரியா.1.0 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தும் அசத்தியிருந்தார்.

சன் டிவியில் TRP-யை அள்ளி வந்த கண்மணி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தார்.இந்த தொடர் சமீபத்தில்  நிறைவடைந்தது.தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சன் டிவியின் பிரபல தொடரான கண்ணான கண்ணே தொடரில் நடித்து அசத்தி வருகிறார்.இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்கும் ப்ரியா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சிலவற்றை பகிர்ந்து வந்தார்.சமீபத்தில் தனது ட்ரான்ஸ்பர்மேஷன் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.எப்படி இருந்தவர் இப்படி மாறிவிட்டார் என்று ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.