ஜெமினி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை கிரண். தொடர்ந்து தல அஜித், உலகநாயகன் கமல், டாப் ஸ்டார் பிரசாந்த் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு டாப் நடிகையானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார் கிரண். 

ஒரு காலத்தில் இளசுகளின் கனவு கன்னியாக இருந்த கிரண், தற்போது எடை கூடிய லுக்கில் உள்ளார். இதனால், அத்தை, அம்மா, அண்ணி, அக்கா கேரக்டரில் நடித்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் முத்தினக் கத்தரிக்காய் படம் வெளியானது. இந்தப் படத்தில் இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி-க்கு அத்தையாக நடித்திருந்தார் கிரண்.

2017-ம் ஆண்டு முதல் திரைப்படங்களில் அதிகம் தலைகாட்டாத கிரண் சந்தானத்துடன் சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இருப்பினும் தான் இன்னும் இளமையுடன்தான் இருக்கிறேன் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அடிக்கடி அரைகுறை உடையில் தனது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இதேபோல் சினிமா பாடல்களுக்கு டப்ஸ் மேஷ் செய்து டான்ஸும் ஆடி வருகிறார் நடிகை கிரண்.

அந்த வகையில் திருமலை படத்தில் விஜய்யுடன் ஆடிய வாடியம்மா ஜக்கம்மா பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். உள்ளாடை தெரியும்படியான ஸ்லீஸ் லெஸ் பனியனில் ஆட்டம் போட்டுள்ளார் கிரண். இதை பார்த்த நெட்டிசன்கள், ஏன் இவ்வளவு கவர்ச்சி என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Keira Rathore (@kiran_rathore_official)