பிக்பாஸ் சீசன் 4 தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. அதனால் ஆட்டம் சூடு பிடித்துள்ளது. அதிலும் போட்டியாளர்கள் பலரும் பல்வேறு விதமான பிரச்சனைகளை தினம்தோறும் உருவாக்கி வருவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நேற்று பிக் பாஸ் வீட்டுக்கு நடிகர் ஜெயம் ரவி வந்து சர்ப்ரைஸ் தந்திருந்தார். 

பிக்பாஸ் வீட்டில் நேற்று அனிதா வெளியேற்றப்பட்டிருந்தார். இந்த வாரம் மொத்தம் ஐந்து போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருந்த நிலையில் இறுதியாக அனிதா மற்றும் ஆஜித் மட்டுமே இறுதி இருவராக இருந்தனர். அப்போது அனிதா வெளியேற்றப்படுவதாக கமல் கார்டை காட்டி அறிவித்தார். அனிதா எலிமினேஷன் என அறிவிக்கப்பட்ட பிறகு அவர் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார். மற்றவர்களை போல கண்ணீர் விடாமல் அவர் சற்று மகிழ்ச்சியாகவே தான் வெளியே வந்தார். 

வழக்கமாக அனைத்து போட்டியாளரும் வெளியேறும் முன் உண்டியலை உடைத்து அதில் இருக்கும் காயின்களை எடுத்து மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் அனிதா அந்த காயின்களை ஏற்கனவே எடுத்து கையில் வைத்திருந்தார். அந்த உண்டியலை மற்ற பொருட்களுடன் கொடுத்தனுப்பிவிடுங்கள் என ஏற்கனவே அவர் சொல்லி வைத்திருந்தார்.

வெளியே வந்து அவர் காயின்களை கொடுத்தனுப்பிய பிறகு பிக் பாஸ் அனிதா விதியை பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் ஏற்றுக்கொள்வதாக இல்லை. இதுவரை அனைத்து விதிகளையும் சரியாக பின்பற்றினீர்கள். அதே போல வெளியே போகும் போதும் கடைபிடிப்பீகள் என நினைக்கிறேன் என பிக் பாஸ் அவரை கண்டித்தாலும் அவர் கேட்கவில்லை.

இறுதியில் கேப்டன் பாலாஜி இதை செய்தே ஆக வேண்டும் என பிக் பாஸ் கூறிய பிறகு அவர் உள்ளே சென்று உண்டியலை எடுத்து வந்து உடைத்தார். அதில் இருக்கும் படம் உடையாதவாரு நான் உடைத்து தருகிறேன் என் ஆவரே உடைத்து கொடுத்தார்.

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இந்த வார நாமினேஷன் நடைபெறுகிறது. ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஷிவானி, கேபி மற்றும் ஆஜீத்தை டார்கெட் செய்கின்றனர். காரணம் டாஸ்க்கில் குறைவான பங்களிப்பு இருந்ததாக தெரிவித்தனர். ஆரி இந்த வார தலைவர் என்பதால் அவரை நாமினேட் செய்ய முடியாது என பிக்பாஸ் தெரிவித்தார். பிறகு வந்த ரியோ ரம்யா பாண்டியனை நாமினேட் செய்தார். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் எப்படி பட்ட டாஸ்க் வழங்கப்படுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.