விஜய் டிவி புதிய சீரியல் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு !
By Aravind Selvam | Galatta | December 27, 2020 19:04 PM IST
விஜய் டிவியின் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று கலக்கப்போவது யாரு. இந்த நிகழ்ச்சியின் மூலம் பலரும் மக்கள் மத்தியில் நட்சத்திரங்களாக உயர்ந்துள்ளனர்,அதில் முக்கியமான ஒருவர் சிவகார்த்திகேயன் இந்த நிகழ்ச்சியில் வெற்றிபெற்று விஜய் டிவியின் தொகுப்பாளராக பணியாற்றி அடுத்து சினிமாவுக்குள் நுழைந்து தற்போது முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருகிறார்.
இவரை போல பலரும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி நட்சத்திரமாக முயற்சி செய்து வருகின்றனர்.இந்த நிகழ்ச்சிகளில் மூலம் பிரபலமான பலரும் மக்கள் மத்தியில் செம ரீச் ஆகி விடுவார்கள்.தங்கதுரை,ராமர்,ரோ
கலக்கப்போவது யாரு சீசன் 5-வில் அசத்திய நவீன் பலரிடமும் வெகுவாக பாராட்டை பெற்றிருந்தார்.இவர் சதீஷுடன் இணைந்து செய்த காமெடிகள் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.மிமிக்கிரி கலைஞரான நவீன் பலரும் செய்யாத வித்தியாசமான குரல்களை மிமிக்கிரி செய்து அசத்துவதில் வல்லவர்,அப்துல் கலாம்,எம்.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்ட சில இதற்கு எடுத்துக்காட்டுகள்.
சமீபத்தில் வெளியான சூரரைப் போற்று படத்தில் அப்துல் காலம் கதாபாத்திரத்துக்கு இவர் தான் குரல் கொடுத்திருந்தார்.தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் நவீன்.இப்படி பல சவால்களை எதிர்கொண்ட நவீன் தற்போது புதிய சவாலை ஏற்றுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள பாவம் கணேசன் என்ற தொடரில் நாயகனாக நவீன் நடிக்கிறார்.இந்த தொடரில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாண பரிசு தொடரில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த நேஹா கௌடா ஹீரோயினாக நடிக்கிறார்.தற்போது இந்த தொடர் வரும் ஜனவரி 4ஆம் தேதி முதல் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
WOW: Aranthangi Nisha's brand new avatar | New Viral Video - Check Out!
27/12/2020 04:11 PM
Archana reveals if she will enter Bigg Boss house again - reply goes viral!
27/12/2020 01:23 PM
Bigg Boss Tamil 4 - New Promo | Aari faces a strong question - check out!
27/12/2020 12:13 PM