ஓடும் ரயிலில் 25 வயது இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. 

மும்பையில் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.

மும்பை பகுதியில் அமைந்துள்ள வாஷி பே பாலத்தில் அமைந்துள்ள ரயில் தண்டவாளங்களுக்கு இடையே சுமார் 25 வயது மதிக்கத் தக்க இளம் பெண் ஒருவர், மயங்கிய நிலையில் கிடப்பதாக, ரயில் ஓட்டுநர் ஒருவர் பார்த்து, சம்பந்தப்பட்ட ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பிறகு, காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பாக அங்கு விரைந்து வந்த உதவிக் காவல் ஆய்வாளர் பவுசாஹேப் ஷிண்டே, அந்த பெண்ணை மீட்டு உள்ளனர். அப்போது, அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான எல்லா விதமான தடையங்களும் இருந்துள்ளன. 

அத்துடன், அந்த பெண்ணை கொலை செய்யும் முயற்சியும் நடந்துள்ளதும், போலீசாருக்கு தெரிய வந்தது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்ட போலீசார், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அந்த பெண்ணுக்கு முதல் உதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு, அங்குள்ள ஜேஜே மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அந்த பெண் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீவிர சிகிச்சைக்குப் பிறகு, அந்த இளம் பெண்ணின் உடல் நிலை தற்போது சீராக உள்ளது என்று, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர் அப்போது, அந்த பெண்ணை மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனால், அடையாளம் தெரியாத நபர்கள் மீது பாலியல் பலாத்கார வழக்கு, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த குற்றச் செயல் குறித்து விசாரணைக்காக, சிறப்பு குழு ஒன்றும் தற்போது அமைக்கப்பட்டு உள்ளது. 

மேலும், அந்த ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த மர்ம நபரக்ள் பற்றியும், அவர்கள் எப்படி இருப்பார்கள்? அவர்களது செயல்பாடுகள் எப்படி இருக்கும் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

இதனிடையே, ஓடும் ரயிலில் 25 வயது இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், இளம் பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்கைள் கூறி 7 லட்சம் ரூபாய்க்கு மேல் பணமும், கார் ஒன்றையும் ஏமாற்றி பறித்த நபரை புனேவில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பையை சேர்ந்த இளம் பெண் ஒருவர், வரன் தேடி திருமண இணையதளத்தில் தனது விவரங்களைப் பதிவு செய்து இருந்தார். அப்போது இவரை தொடர்பு கொண்ட 42 வயது நபர் ஒருவர் அப்பெண்ணைத் திருமணம் செய்ய விரும்புவதாகத் தெரிவித்து உள்ளார். அத்துடன், அவர் தன்னை அதிகம் படித்தவர் போல் காட்டிக்கொண்டார் என்றும், நாளடைவில் அப்பெண்ணிடம் பேசி அவரின் நம்பிக்கையைப் பெற்ற பிறகு, இப்படியான மோசடியில் ஈடுபட்டார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.