“கள்ளக் காதலனுடன் ஓடிய மனைவியை, குடும்பத்தினர் அழைத்து வந்த நிலையில், அவர் மீண்டும் நகைகள் மற்றும் புது காருடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள கொடுங்குளம் பகுதியை சேர்ந்த 40 வயதான கார் வியாபாரி ஒருவர், தன்னுடைய 30 வயதான மனைவி மற்றும் அவருடைய பெண் குழந்தையுடன் மிகவுமு் வசதியாகவே வாழ்ந்து வந்தார்.

அத்துடன், அவர் வேலை விசயமாக அடிக்கடி வெளியூர் சென்று வந்தார். சில நேரங்களில் அவர் வெளியூரிலேயே தங்கி விடுவதும் வழக்கம்.

இப்படியான சூழலில் தான், கார் வியாபாரியின் 30 வயதான மனைவிக்கு அதே ஊரை சேர்ந்த ஒரு இளைஞனுடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக் காதலாக மாறியிருக்கிறது.

இதனால், அந்த பெண் கடந்த ஆகஸ்டு மாதம் தனது வீட்டிலிருந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை எடுத்து கொண்டு, தனது வீட்டிலிருந்த புதிய சொகுசு காருடன் மாயமாகி இருக்கிறார். 

இது தொடர்பாக பதிக்கப்பட்ட கணவன், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், ஒரு மாத தீவிரமா விசாரணைக்குப் பிறகு, அவர்களை டெல்லியில் கண்டுப்பிடித்தனர். 

அப்போது, அவர்களை சமாதானம் செய்து வைத்து போலீசார், அந்த பெண்ணை சமாதானம் பேசி மீண்டும் கணவருடன் சேர்த்து வைத்தனர்.

அதன் படி, அவரது மனைவி அந்த கணவனுடன் சில மாதங்கள் குடும்பம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில், அந்த பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரின் கள்ள காதலனோடு மீண்டும் மாயமாகி உள்ளார். 

இதனால், அதிகாலை நேரத்தில் தூக்கத்திலிருந்து கண் விழித்த அந்த கணவன், தனது மனைவி வீட்டில் இருந்த நகைகள் மற்றும் காருடன் மாயமானதைக் கண்டு, மிகவும் மனம் நொந்து போனார்.

இதனையடுத்து, அங்குள்ள காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து அந்த கள்ளக் காதலர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.