பாகுபலி என்ற பிரம்மாண்ட படைப்புக்குப் பிறகு அடுத்த பிளாக்பஸ்டர் திரைப்படமாக இயக்குனர் S.S.ராஜமௌலியின் இயக்கத்தில் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக தயாராகி வருகிறது RRR திரைப்படம். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்டிஆர் & ராம்சரண் RRR திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் RRR திரைப்படத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட் கதாநாயகியாக நடிக்க, அஜய் தேவ்கன் , சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.RRR படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் KK.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளர் M.M.கீரவாணி இசையமைத்துள்ளார். 

அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 7 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள RRR திரைப்படத்தை, DVV என்டர்டெயின்மென்ட் சார்பில் DVV.தனயா தயாரிக்க, லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் பெண் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் வெளியிடுகின்றன. இதுவரை வெளிவந்த RRR-GLIMPSE வீடியோ மற்றும் நட்பு,நாட்டுக்கூத்து & உயிரே ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 

இந்நிலையில் முன்னதாக RRR படத்தின் ட்ரைலர் வருகிற டிசம்பர் 3-ம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தவிர்க்க முடியாத சில காரணங்களால் ட்ரைலர் ரிலீஸ் தற்போது தள்ளிப்போவதாகவும் விரைவில் ட்ரைலர் ரிலீஸாகும் புதிய தேதி அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.