தமிழ் சுயாதீன இசையுலகின் மிகவும் பிரபலமான இசைக் கலைஞர்களில் ஒருவர் டிஜே அருணாச்சலம். லண்டன் வாழ் தமிழரான டிஜே அருணாச்சலம் பல சூப்பர்ஹிட் சுயாதீன பாடல்களை கொடுத்ததுள்ளார். மேலும் நடிகராக தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளிவந்து மெகா ஹிட்டான அசுரன் திரைப்படத்தில் நடிகர் தனுஷின் மகனாக முக்கிய கதாபாத்திரத்தில் டிஜே அருணாச்சலம் நடித்திருந்தார். தொடர்ந்து தற்போது சிலம்பரசன் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் பத்து தல படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் டிஜே.

முன்னதாக டிஜே அருணாச்சலத்தின் ஃபேவரட் ஆல்பமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற முட்டு முட்டு ஆல்பத்தின் தொடர்ச்சியாக தற்போது முட்டு முட்டு 2 தயாராகிவருகிறது. குட்டி பட்டாசு & வாடா ராசா ஆகிய பாடல்களை இயக்கிய இயக்குனர் வெங்கி இயக்கத்தில் ஸ்டூடியோ FIVE புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்பாடலில் யோகி.பி இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏற்கனவே விஜய் டிவியின் குக் வித் கோமாளி புகழ் முட்டு முட்டு 2 பாடலில் இணைந்துள்ள நிலையில், சிவாங்கியும் தற்போது இணைந்துள்ளார் என அதிகாரப்பூர்வமாக டிஜே அருணாசலம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். டிஜே அருணாச்சலம் உடன் இணைந்து முட்டு முட்டு 2 பாடலை சிவாங்கி பாடியுள்ளார். விரைவில் இப்பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.