மலையாள சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் டொவினோ தாமஸ் தமிழில் நடிகர் தனுஷ் நடித்த மாரி படத்தில் வில்லனாக மிரட்டினார். தொடர்ந்து மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடிக்கும் டொவினோ தாமஸ் அடுத்ததாக நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து வாஷி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

முன்னதாக சூப்பர்ஹீரோ கதாபாத்திரத்தில் டொவினோ தாமஸ் நடித்துள்ள மின்னல் முரளி திரைப்படம், இந்த ஆண்டு(2021) கிறிஸ்துமஸ் விருந்தாக வருகிற டிசம்பர் 24ஆம் தேதி மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் நேரடியாக ரிலீஸாகவுள்ளது. 

மின்னல் முரளி படத்தில் டொவினோ தாமஸ் உடன் இணைந்து குரு சோமசுந்தரம், அஜு வர்கீஸ், ஹரிஸ்ரீ அசோகன் ஆகியோர் நடித்துள்ளனர். வீக் என்ட் ப்ளாக்பஸ்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், மின்னல் முரளி படத்தை இயக்குனர் பாசில் ஜோசப் இயக்கியுள்ளார்.சமீர் தாஹிர் ஒளிப்பதிவில் ஷான் ரஹ்மான் மற்றும் சுஷில் ஷ்யாம் இணைந்து இசையமைத்துள்ளனர். 

ஏற்கனவே வெளிவந்த மின்னல் முரளி படத்தின் டீசர், ட்ரைலர் மற்றும் பாடல்கள் மின்னல் முரளி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், தற்போது மின்னல் முரளி திரைப்படத்தின் புதிய ட்ரைலர் வெளியானது. மிரட்டலான அந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.