நந்திவரம் ஊரப்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் ஊரப்பாக்கம் ஜெகதீஷ் நகர் பகுதியில் உள்ள வீடுகளை சுற்றி தேங்கி நிற்கிறது.

flood

வடகிழக்குப் பருவ மழை தமிழ்நாட்டில் இந்த மாதம் துவக்கத்திலிருந்தே விட்டுவிட்டு கன மழையாகப் பெய்து வருகிறது. இதனால், சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென் மாவட்டங்கள் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை இழந்தனர். அதேபோல் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்து மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துபாதிப்பிக்குள்ளாயினர். 

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம்  ஊரப்பாக்கம் பகுதியில் ஜெகதீஷ் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் இருக்கும் வீட்டின் நடுவே திடீரென பள்ளம் ஏற்பட்டு அவ்வழியாக வீட்டின் அடியில் வெள்ள நீர் போனது அவ்வீட்டில் இருந்தவர்களையும், அதன் அருகே இருந்தவர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. அதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் தொடர்ந்து வெளியேறி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நந்திவரம் ஊரப்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் ஊரப்பாக்கம் ஜெகதீஷ் நகர் பகுதியில் உள்ள வீடுகளை சுற்றி தேங்கி நிற்கிறது.

மேலும் ஜெகதீஷ் நகர் 2-வது குறுக்கு தெரு அருகே ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பின்புறம் அடையாறு கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் தொடர்ந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி கொண்டிருப்பதன் காரணமாக அடையாறு கால்வாய் அருகில் உள்ள குணசேகரன் என்பவரது வீட்டின் அறையில் திடீரென 10 அடி அகலத்துக்கு உள்வாங்கி திடீர் பள்ளம் ஏற்பட்டது. அந்த பள்ளத்தில் ஒரு புறத்தில் இருந்து மறுபுறத்துக்கு வெள்ளம் ஓடுவதை பார்த்த வீட்டில் இருந்த குணசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.  

அதனைத்தொடர்ந்து அவ்வீட்டின் உரிமையாளர் வீட்டின் ஹால் ரூமின் தரையில் விரிசல் ஏற்பட்டிருப்பதை கண்டார். அதனைத் தொடர்ந்து என்ன திடீரென விரிசல் ஏற்படுகிறதே என வைட் சிமெண்ட் கொண்டு அதனை அடைத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரது மனைவி அவரின் அருகில் நின்றுகொண்டிருந்தார். அச்சமயம் திடீரென தரையில் பெரும் விரிசல் ஏற்பட்டது. நொடிப் பொழுதில் சுதாரித்துக்கொண்ட அவர், தனது மனைவியைப் பின்னோக்கி இழுத்தார். அப்படி அவர் இழுத்த அடுத்த நிமிடம் வீட்டின் நடுவில் பெரும் சத்தத்துடன் அந்த டைல்ஸ் உடைந்து பூமியின் அடியில் விழுந்து பள்ளம் ஏற்பட்டு அதன் அடியில் வெள்ள நீர் ஓடியது. தரை உள்வாங்கிய போது குணசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றொரு அறையில் இருந்ததால் அனைவரும் அதிர்ஷ்டவசமாக எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் உயிர் தப்பினர். 

மேலும் தற்பொழுது இதை சரிசெய்தாலும் நாளை அந்த வீட்டிற்குள் செல்லும்போதும், அடுத்த வெள்ளத்தின்போதும் இதுபோன்ற அசம்பாவிதம் நடந்துவிடுமோ எனும் அச்ச உணர்வுடனே கடக்க வேண்டும்” என்று தெரிவித்தார். அங்கிருக்கும் அருகிலும் மற்றவர்களுக்கு தங்கள் வீட்டினுள் செல்வதற்கே பயமாக உள்ளதுஎனவும் அதனால் அங்கிருந்து அனைவரும் வேறு இடத்திற்கு மாறிவிடுவோம் எனவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.