தனது முன்னாள் காதலன் தன்னுடன் மீண்டும் பேச வேண்டும் என்பதற்காக, காதலி ஒருவர் போலியாக திருமணம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வித்தியாசமான காதல் கதை, ஜெர்மனி நாட்டில் தான் நடந்திருக்கிறது.

நடிகர் விஜய் நடித்த “குஷி” படத்தில், “ஈகோ பிடிச்ச கழுத” என்ற ஒரு பிரபலமான வசனம் வரும். அது போலதான், பல காதலர்கள் தங்களுக்குள் சரியான புரிதல் இல்லாத போது, அவர்களுக்குள் தானாகவே ஈகோ வந்து சேர்ந்து விடுகிறது. இந்த ஈகோவே, நாளடைவில் அவர்களுக்குள் பெரும் பிரச்சனையை வெடித்து பிரிவுக்கும் காரணமாகி விடுவதுதான் பெரும் சோகம்.

அந்த வகையில், ஜெர்மனியின் தலைநகர் பெர்லினை சேர்ந்த ஜாக்குலின் என்ற இளம் பெண், அந்நாட்டைச் சேர்ந்த ஜாக் என்பவரை காதலித்து வந்திருக்கிறார்.

இவர்கள் இருவரும் நெருங்கி ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலர்களுக்கு இடையே திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து உள்ளனர். 

ஆனால், அவர்கள் இருவரும் பேசாமலே இருந்து வந்தனர். இதனால், அந்த காதலனை காட்டிலும், அந்த காதலி பெரிதும் தவித்துப் போனார்.

இந்த சூழலில் தான், தனது முன்னாள் காதலனுடன் மீண்டும் தன்னுடன் பேச வேண்டும் என்று விரும்பிய காதலி ஜாக்குலின், சற்று வித்தியாசமாக யோசித்து, ஒரு விபரீதமான முடிவை எடுத்தார். 

அதன் படி, தனது காதலனிடம் சற்று ஈகோ பார்த்த அந்த காதலி, “நான் முதலில் போய் பேசக்கூடாது, என் காதலனே என்னிடம் வந்து முதலில் பேச வேண்டும் என்றும், அவர் முடிவு செய்திருக்கிறார். 

அதன்படி, காதலி ஜாக்குலின், தனது காதலன் ஜாக்கை வெறுப்பேற்றும் விதமாக, அவரை தானாக தேடி வந்து பேச வைக்கும் முயற்சியில், “வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டது போன்ற புகைப்படங்களை எடுத்து, அவற்றை தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டால், இதனைப் பார்க்கும் காதலன் ஜாக், தன்னிடம் பேசிவிடுவார்” என்றும் அந்த காதலி நினைத்துக்கொண்டு இருந்தார்.

அதன்படியே, அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்த காதலி ஜாக்குலின், புதுமணப்பெண் போல ஆடைகளை அணிந்து வந்திருக்கிறார். 

மேலும், அந்த திருமண மண்டபத்தை மட்டுமின்றி மாப்பிள்ளையாக ஒருவரையும் வாடகைக்கு அவர் அழைத்து வந்திருக்கிறார்.

அதன்படி, புதுமாப்பிளை போல ஆடை அணிந்த அந்த இளைஞனுடன், ஜாக்குலின் திருமணம் செய்துகொண்டது போல் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். 

அத்துடன், அவர்கள் இருவரும் தம்பதிகளா கேக் வெட்டுவது போன்றும், திருமண நிகழ்ச்சியை கொண்டாடுவது போன்றும் போட்டோக்கள் மற்றும் வீடியோ என்று, பல கோணங்களில் அவர் எடுத்திருக்கிறார்.

இதனையடுத்து, தனக்கும் வாடகைக்கு அழைத்து வந்த இளைஞனுக்கும் நடைபெற்ற போலி திருமணத்தின் புகைப்படங்கள், வீடியோக்களை காதலி ஜாக்குலின், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். 

அந்த இன்ஸ்டாகிராம் பதிவுகளை பார்த்து விட்டு, தனது முன்னாள் காதலனான ஜாக் தன்னுடன் பேசுவான் என்றும் இளம் பெண் ஜாக்குலின் காத்திருப்பதாகவும், செய்திகள் வெளியாகி உள்ளன. இச்சம்வம், அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.