டீச்சராக பணியாற்றும் போலீஸ் காரரின் மனைவியை, இளைஞர் ஒருவர் பல ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது

உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள மெடிக்கல் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் உள்ள ஜாக்ரதி விஹாரில் வசித்து வந்த வழக்கறிஞர் ஒருவர், தனது மகளை அங்குள்ள பல்லவ புறம் பகுதியைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவருக்குக் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்திருக்கிறார். 

இவர்களது திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த நிலையில், அடுத்த சில ஆண்டுகளிலேயே அந்த பெண்ணுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து உள்ளது. இதனையடுத்து, அடுத்த சில நாட்களிலேயே அந்த போலீஸ்கார கணவன் எதிர்பாராத விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

அதன் பிறகு, அந்த பெண் தனது கைக்குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.

அத்துடன், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் அவர் டீச்சராக பணிக்குச் சேர்ந்து, தனது குழந்தைகளையும் வளர்த்து வந்தார்.

இந்த சூழலில் தான், அந்த பெண்ணுக்குக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள அம்ரோஹா மாவட்டத்தில் இருக்கும் நவ்கானுக்கு உட்பட்ட ராஜக்பூர் கிராமத்தைச் சேர்ந்த கவுரவ் சவுத்ரி என்ற இளைஞருடன், அந்த டீச்சருககு அறிமுகம் ஏற்பட்டு உள்ளது. 

அதன் பிறகு, அந்த இளைஞரும், இந்த டீச்சரும் ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கி உள்ளனர். ஒருகட்டத்தில், அந்த டீச்சர், திருமணம் விசயம் பற்றி தனது காதலனிடம் பேசியிருக்கிறார்.

அப்போது, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட அந்த காதலன், “நிச்சயம் நான் உங்களைத் திருமணம் செய்து கொள்கிறேன்” என்று கூறி அந்த டீச்சரை ஏமாற்றி நம்ப வைத்து, தொடர்ந்து பல ஆண்டுகளாக அவரை பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்.

ஆனால், இப்போது வரை அந்த டீச்சரை, காதலன் கவுரவ் சவுத்ரி திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றி வந்திருக்கிறார்.

இதனால், தான் ஏமாற்றப்பட்டதைத் தெரிந்துகொண்ட அந்த டீச்சர், நேராக கவுரவ் சவுத்ரியிடம் சென்று, “என்னை இப்போதே உடனே திருமணம் செய்துகொள்ளுங்கள்” என்று வலியுறுத்தி இருக்கிறார். ஆனால், இதற்கு கவுரவ் சவுத்ரி முற்றிலுமாக மறுத்து உள்ளார்.

இதனால், தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்துகொண்ட அந்த டீச்சர், அங்குள்ள காவல் நிலையத்தில் கௌரவ மீது புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், டீச்சரை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்ற பாலியல் பலாத்காரம் செய்து வந்த காதலன் கவுரவ் சவுத்ரியை தீவிரமாகத் தேடி வருகின்றனர். தற்போது, அவர் தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.