டியூஷன் சென்ற 15 வயது பள்ளி மாணவியை, சிலர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வழக்கம் போல் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான், இந்த கொடூர குற்ற சம்பவமும் அரங்கேறி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் மீரட் பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவர், அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அந்த சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து மதியம் நேரத்தில் அந்த பகுதியில் டியூஷனுக்கு சென்றிருக்கிறார்.

இதனையடுத்து, மாலை நேரத்தில் அதாவது பொழுது சாயும் முன்பாக டியூஷனில் இருந்து அந்த சிறுமி வீடு திரும்ப முயன்றதாகத் தெரிகிறது. அப்போது, அந்த சிறுமி தனியாக வந்துகொண்டிருந்தபோது, அந்த பகுதியைச் சேர்ந்த சில மர்ம நபர்கள், அந்த சிறுமியை அங்கிருந்து கடத்திச் சென்று உள்ளனர்.

ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குச் சிறுமியைக் கடத்திச் சென்ற அந்த மர்ம நபர்கள், வெறித் தீர அந்த 15 வயது பள்ளி மாணவியை மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

பாலியல் வெறியெல்லாம் தீர்ந்த பிறகு, அந்த மாணவியை அதே இடத்தில் விட்டு விட்டு, அந்த மர்ம நபர்கள் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, அந்த சிறுமி எப்படியோ நடக்க முடியாமல் நடந்து வந்து வீடு திரும்பிய நிலையில், தனது பெற்றோரிடம் தனக்கு நடந்த எல்லாவற்றையும் கூறி அழுதிருக்கிறார்.

அதே நேரத்தில், தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்கார கொடுமையால், அந்த சிறுமி கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தெரிகிறது.

இப்படியான நிலையில் தான், அந்த 15 வயது பள்ளி மாணவி திடீரென்று இறந்து போனார். 

இது குறித்து சிறுமியின் தந்தை ரோஷன் கூறும்போது, “எங்களது மகளை பாலியல் பலாத்காரம் செய்த அந்த மர்ம கும்பல் தான், விஷம் கொடுத்து கொலை செய்து உள்ளனர்” என்று, பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார் 

அத்துடன், “எங்கள் மகள் இறப்பதற்கு முன்பு நடந்த எல்லாவற்றையும் எங்களிடம் அவள் கூறிவிட்டாள் என்றும் குறிப்பிட்ட அவர், உடனடியாக எங்கள் மகளை நாங்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம் என்றும், ஆனால் அவள் பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதாகவும்” தெரிவித்து உள்ளார்.

அதே நேரத்தில், சிறுமி உயிரிழக்கும் போது, அவர் கைப்பட எழுதிய கடிதமும் போலீசாருக்கு தற்போது கிடைத்து உள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமி எழுதிய கடிதத்தின் அடிப்படையில், இரண்டு நபர்களை தற்போது போலீசார் கைது செய்து உள்ளனர். 

இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், “விஷம் சாப்பிட்டுத் தான் சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக” போலீசார் கூறியதாகவும் பேசப்படுகிறது.

அத்துடன், “சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனை முடிவுக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு உள்ளது என்றும், இது குறித்து பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே முழுமையான தகவல்கள் கிடைக்கும் என்றும், போலீசார் தெரிவித்து உள்ளனர்.

எனினும், இந்த வழக்கு தொடர்பாக போலீசார் மிகத் தீவிரமாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இந்த வழக்கில் பல கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.