இரு இளைஞர்களை கடத்தி ஒரு இளம் பெண்ணோடு ஆபாச படமெடுத்து பணம் கேட்டு மிரட்டி வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள கர்கௌடா பகுதியைச் சேர்ந்த சுபைர் மற்றும் அவரது நண்பர் ஷாபாஸ் ஆகிய இருவரும் தங்களது பெற்றோருடன் வசித்து வந்தனர். 

இவர்கள் மிகவும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனை தெரிந்துகொண்ட அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல், கடந்த வாரம் இரவு நேரத்தில், லோஹியாநகர் மண்டியில் உள்ள ஒரு பண்ணை வீட்டுக்கு அவர்களுக்கு பார்ட்டி கொடுப்பதாக ஆசை காட்டி அவர்களை நேரில் வரவழைத்து உள்ளனர்.

அப்போது, அங்கு ஒரு இளம் பெண்ணும் 6 இளைஞர்களும் அங்கு இருந்து உள்ளனர். அதன் பிறகு, அங்கு வந்த சுபைர் மற்றும் அவரது நண்பர் ஷாபாஸ்  ஆகியோரை அங்கிருந்த அந்த இளம் பெண்ணொடு ஆடைகளை எல்லாம் கழற்றி ஒரு அவர்கள் 3 பேரையும் ஒன்றாக சேர்த்து ஒரு தூணில் கட்டி வைத்து உள்ளனர். 

அதன் பிறகு அந்த பெண்ணோடு உடையில்லாமல் இருப்பது போல் அவர்கள் ஆபாசமக வீடியோ எடுத்து, அந்த வீடியோவை அவர்களிடம் காண்பித்து அதை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி 3 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். 

ஆனால் அவர்கள் தங்களிடம் அவ்வளவு பணமில்லை என்று கூறியதால், அவர்களிடமிருந்த 32 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து கொண்டு உள்ளனர். 

மேலும், அவர்களிடமிருந்த செல்போன் மற்றும் விலையுயர்ந்த பொருட்களையும் பறித்து கொண்ட அந்த கும்பல், அதன் பிறகு அவர்களை துரத்தி அடித்து அனுப்பி உள்ளனர்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சுபைர் மற்றும் அவரது நண்பர் ஷாபாஸ் ஆகியோர் அங்குள்ள காவல் நிலையத்தில் இது குறித்து, அந்த 6 பேர் மீதும், அங்கிருந்த அந்த இளம் பெண் மீதும் புகார் அளித்தனர். 

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்ட நிலையில், “இந்த வழக்கில் சமரசம் செய்து கொள்ளுமாறு” பாதிக்கப்பட்டவர்களை போலீசார் வற்புறுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.