அரிமா நம்பி,இருமுகன் உள்ளிட்ட படங்களை இயக்கி வெற்றிகரமான இயக்குனராக அவதரித்தவர் ஆனந்த் ஷங்கர்.வித்தியாசமான திரைக்கதை கொண்ட இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்திருந்தது.

அடுத்ததாக விஜய் தேவர்கொண்டா நடிப்பில் உருவான நோட்டா படத்தினை இயக்கியிருந்தார் ஆனந்த் ஷங்கர்.இந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது,இதனை தொடர்ந்து விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் எனிமி படத்தினை இயக்கியுள்ளார்.

மினி ஸ்டுடியோ சார்பாக வினோத் குமார் இந்த படத்தினை தயாரித்துள்ளார்.மிர்னாலினி ரவி,மம்தா மோகன்தாஸ்,பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.சாம் சி எஸ் இந்த படத்திற்கு பின்னணி இசை அமைத்துள்ளார்.

இந்த படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ஆம் தேதி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.அண்ணாத்த போன்ற பெரிய படத்துடன் வெளியான இந்த படத்தின் முதல் காட்சியை பார்க்கவந்த ரசிகர்களிடம் விஷால் தனது நன்றியை தெரிவித்து கொண்டு,திரையரங்கம் தனக்கு கோவில் போன்றது இங்குதான் சினிமாவை கற்றுக்கொண்டேன்,தனது மனம் கவர்ந்த நாயகர்களான விஜய்,ரஜினி உள்ளிட்டோரின் படங்களை பார்த்துள்ளேன் அப்படி தனது படத்தையும் பார்க்கவந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார் விஷால்.