மருமகளை பாலியல் பலாத்காரம் செய்த மாமனாரை, மகன் தட்டிக் கேட்காமல் தன் மனைவியை விவகாரத்து செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு பெயர் போன உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் இந்த கொடூர சம்வமும் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்தில், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 

இந்த குடும்பத்தில் உள்ள தந்தை, ரிசர்வ் போலீஸ் படையான மாகாண ஆயுதப் படையில் கான்ஸ்டபிளாக பணி புரிந்து வருகிறார். இவரின் மகன், அங்குள்ள ஒரு காவல் நிலையத்தல், போலீஸ் கான்ஸ்டபிளாக பணி புரிந்து வருகிறார். 

இப்படியான நிலையில், போலீஸ் கான்ஸ்டபிளாக பணி புரிந்து வரும், இந்த இளைஞருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டார் முறைப்படி திருமணம் நடைபெற்று உள்ளது. திருமணத்திற்கு பிறகு, அவர்கள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்த சூழலில் தான், தனது மருமகள் மீது சபலப்பட்டிருக்கிறார், ரிசர்வ் போலீஸ் படையான மாகாண ஆயுதப் படையில் கான்ஸ்டபிளாக பணி புரிந்து வரும் அந்த பெண்ணின் மாமனார். இதற்காக, அவர் தக்க சமயம் பார்த்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.

இப்படியான நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அந்த வீட்டில் உள்ள அனைவரும் வெளியில் சென்றிருந்தனர். 

அப்போது, அந்த வீட்டில் மருமகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்து உள்ளார். அந்த நேரம் பார்த்து வெளியே சென்றிருந்த போலீஸ் மாமனார், வீட்டிற்குள் வந்து உள்ளார். வீட்டிற்கு வந்ததும், மருகமளைப் பார்த்து இன்னும் சபலப்பட்ட அவர், அந்த பெண்ணிடம் “காபி வேண்டும்” என்று, கேட்டிருக்கிறார்.

அந்த பெண்ணும் காபி கொண்டு வந்து கொடுத்த நிலையில், அந்த பெண்ணின் கையைப் பிடித்து இழுந்து, தனது மருமகள் என்று பார்க்காமல் அந்த போலீஸ் மாமனார், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அத்துடன், “இந்த பாலியல் பலாத்காரத்தை வெளியே யாரிடமாவது சொன்னால், உன்னை கொலை செய்து விடுவேன்” என்றும், அந்த மாமனார் மிக கடுமையாக மிரட்டி இருக்கிறார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், “என்ன செய்வது என்று தெரியாமல்” அழுதுகொண்டே இருந்து உள்ளார். அதன் பிறகு, அந்த பெண்ணால் அந்த வீட்டில் இயல்பாக இருக்க முடியவில்லை. அதே நேரத்தில், இது பற்றி போலீசாக இருக்கும் தனது கணவனிடம் எப்படியாவது சொல்லியே ஆக வேண்டும் என்றும், அவர் முடிவு செய்தார்.

அதன் படி, தக்க சமயம் பார்த்து, அந்த பெண், தனது கணவனிடம் மாமனாரின் பாலியல் பலாத்கார சம்பவம் பற்றி கூறி அழுதிருக்கிறார்.

அதை கேட்ட அந்த போலீஸ் கணவன், எந்த சலனமும் இல்லாமல் எழுந்த அவர், தனது தந்தையிடம் இதை பற்றி ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. ஆனால், அதற்கு பதிலாக தனது மனைவியை அந்த போலீஸ் கணவன் விவாகரத்து செய்யும் வகையில், 3 முறை தலாக் சொல்லி இருக்கிறார்.

இப்படி, இஸ்லாம் மதப்படியான இந்த விவாகரத்தாள், அந்த பெண் இன்னுனம் கடுமையான மன உலைச்சலுக்கு ஆளாகி உள்ளார். 

இதனால், தனது தாயார் வீட்டிற்கு திரும்பிய அந்த பெண், தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக தனது கணவன் மற்றும் மாமனார் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மருமகளை பாலியல் பலாத்கார செய்த குற்றத்திற்காக, போலீசாக உள்ள அந்த பெண்ணின் மாமனாரை அதிரடியாக கைது செய்தனர்.

மேலும், மனைவியை தொடர்ந்து வரதட்ணை கேட்டு துன்புறுத்தி வந்த போலீசாக இருக்கும் அந்த பெண்ணின் கணவனையும் அதிரடியாக கைது செய்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.