இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம்.

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலிப்குமார் எழுதி இயக்கும் பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க, யோகிபாபு, டாம் ஷைன் சாக்கோ, ஜான் விஜய், VTV கணேஷ், அபர்ணா தாஸ் ஆகியோருடன் இணைந்து இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து  தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 66 திரைப்படத்தைபிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு & ஷிரிஷ்-ன், ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கபடவுள்ளதாக, சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற  உறுப்பினர்களை நேரில் சந்தித்தார் தளபதி விஜய். இந்த சந்திப்பின்போது வெற்றி மற்ற மக்கள் இயக்கத்தினருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்த தளபதி விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது அந்த புகைப்படம் இதோ...