கூல் ட்ரிங்க்ஸ் குடித்து மயங்கிய இளம் பெண்ணை, 3 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி
உள்ளது.

பாலியல் பலாத்காரத்திற்கு எப்போதும் பெயர் போன உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான், இந்த கொடூர சம்பவமும் தற்போது அரங்கேறியிருக்கிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள ரோஹ்தா பகுதியைச் சேர்ந்த அமர் பால் என்ற நபர், அங்குள்ள ரஸ்னா என்னும் சாலையில் ஒரு ஹோட்டல்
ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.

அத்துடன், அந்த ஹோட்டலின் முதல் மாடியில் அமர் பாலின் மகன் உஜ்வால் என்ற இளைஞன், ஜிம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த சூழலில், கடந்த வெள்ளிக் கிழமை அன்று மாலை நேரத்தில், உஜ்ஜாவலும் அவனது 2 நண்பர்களும் சேர்ந்து ஒரு பெண்ணை அந்த ஹோட்டலுக்கு அழைத்து
வந்துள்ளனர். 

அந்த ஹோட்டலுக்கு வந்த பிறகு, அவர்கள் 3 பேரும் சேர்ந்து அந்த பெண்ணிற்கு மயக்க மருந்து கலந்த கூல் ட்ரிங்க்ஸை குடிக்க கொடுத்து உள்ளனர்.

இதனை, அந்த பெண்ணும் வாங்கி குடித்திருக்கிறார். அத்துடன், அடுத்த சிறிது நேரத்திலேயே அந்த பெண் அங்கேயே மயங்கி இருக்கிறார்.

அதன் பின்னர், மயங்கிய அந்த இளம் பெண்ணை, அந்த 3 இளைஞர்களும் சேர்ந்து தூக்கிக்கொண்டு, அருகில் உள்ள ஒரு இடத்தில் கிடத்தி, 3 பேரும் மாறி மாறி
கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதனையடுத்து, அந்தப் பெண் சுயநினைவுக்கு வந்து கண் விழித்துப் பார்த்ததும், தனது உடலில் உள்ள ஆடைகள் கிழிக்கப்பட்டு, தான் அலங்கோலமாக இருப்பதைப்
பார்த்து கடும் அதிர்ச்சியடைந்திருக்கிறார் அந்த பெண்.

மேலும், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதைப் புரிந்துகொண்ட அந்த பெண், கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், பலமாக கத்தி கூச்சலிட்டிருக்கிறார்.

அப்போது, ஓடி வந்த இளைஞர்களிடம், “எத்தனை பேருடா என்னை பலாத்காரம் செஞ்சிங்க?” என்று, சத்தம் போட்டு கத்தியிருக்கிறார். இதனால், பயந்துபோன அந்த
இளைஞர்கள்  அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, அந்த பெண் தனது உறவினர் ஒருவரை அழைத்து, தனக்குத் தனது ஆண் நண்பர்களால் நேர்ந்த பாலியல் பலாத்கார கொடுமை பற்றி கூறி
அழுதிருக்கிறார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அவர், அந்த பெண்ணை, அங்குள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, புகார் அளித்திருக்கிறார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவம் நடைபெற்றது இடத்திற்கு விரைந்து வந்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அந்த ஜிம் உரிமையாளர் உஜ்வால் மற்றும் சத்வாய் கிராமத்தைச் சேர்ந்த சவுரப் என்ற 2
இளைஞர்களும் பாலியல் பலாத்கார குற்றத்தில் அதிரடியாகக் கைது செய்தனர். அத்துடன், 3 வது குற்றவாளியான மோனு, போலீசார் தன்னை கைது செய்ய
வருவதை அறிந்துகொண்டு, அங்கிருந்து தப்பித்துத் தலைமறைவாகி இருக்கிறார்.

மேலும், பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண்ணை, அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த
சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.