“உன் புருஷன நான் வச்சிருக்கேன்.. பணத்தைத் தரியா? உன் புருஷன தரியா?” என்று, புது டெக்னிக்கில் மிரட்டி பணம் பறிக்கும் கில்லாடி பெண் ஒருவர் போலீசாரிடம் சிக்கிக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் தான் இப்படி ஒரு நூதன முறையிலான பணம் பறிக்கும் மிரட்டல் சம்பவம் அரங்கேறி அனைத்து தரப்பு மக்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த டாக்டர் கோபாலகிருஷ்ணனின் மகள் சத்தியபாமா என்ற பெண், தனது தாயார் சந்திராவுடன் வசித்து வருகிறார். இவரின் தயாரும் மருத்துவராக உள்ளார். 

அத்துடன், சத்யபாமா அங்குள்ள ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஏரியா மேலாளராகப் பணியாற்றி வந்தார்.

இந்த சூழலில் தான், அந்த பகுதியில் உள்ள ஒரு மருந்து கம்பெணியின் உயர் அதிகாரியான 60 வயதான அதிகாரியையும், அவரது உறவினர்களையும் அழைத்து சத்யபாமா, கடும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

அதாவது, அந்த அதிகாரியுடன் தான் இருக்கும் புகைப்படங்களை மார்பிங் செய்து, அதனை சமூக வலைத்தளங்களான பதிவிட்டு, “என்னை அந்த அதிகாரி 2 வதாக திருமணம் செய்து கொண்டதாக” கூறி வந்திருக்கிறார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த அதிகாரியிடமிருந்து அவர் பல லட்சம் ரூபாய் பணத்தை மிரட்டியே பறித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இப்படியாக தன்னிடம் சிக்கும் பல ஆண்களையும், திருமணம் செய்து கொண்டதாக  சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அதன் மூலமாக, பாதிக்கப்பட்ட ஆண்களிடம் இருந்து பணம் மற்றும் பல்வேறு விதமான சலுகைகளை மிரட்டி பெற்றுக்கொள்வது சத்யபாமாவின் வாடிக்கையாக இருந்திருக்கிறது. இப்படியாக, அந்த அதிகாரியைப் போல், பல ஆண்கள் சத்யபாமாவிடம் பலரும் ஏமார்ந்திருப்பதாக ஒரு பெரிய பட்டியலே வெளியாகி இருக்கிறது.

அதாவது, சமூக வலைத்தளங்களில் மிகவும் வசதியான ஆண்களைத் தேடிப்பிடித்து நட்பாக்கிக் கொள்ளும் அந்த பெண், பிறகு அவர்களை நேரில் சந்தித்து ஒரு பாலிசி போடுங்கள் என்று, அவர்களிடம் நெருக்கமாவதும், அதன் தொடர்ச்சியாக, நெருக்கமான நட்பு வலையத்துக்குள் அவர்களைக் கொண்டு வந்து அவர்களுடன் நெருக்கமாக இருப்பது போன்று புகைப்படங்களை எடுத்து வைத்துக்கொண்டு, அந்த புகைப்படங்களைச் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அனுப்பி வைத்து பணம் கேட்டு மிரட்டுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்த சூழலில் தான் தற்போது அந்த அதிகாரியைத் தேடி, ஐதராபாத் மருத்துவமனைக்கே தேடிச் சென்று அவரது குடும்பத்தினரை மிரட்டி “எனக்கும் உங்களது சொத்தில் பங்கு வேண்டும்” என்று மிரட்டி இருக்கிறார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த குடும்பம், சத்யபாமா மீது அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.

இது தொடர்பான விசாரணையில், கடந்த 2018 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் அந்த அதிகாரியைச் சந்தித்து சத்யபாமா, இன்சூரன்ஸ் பாலிஸி எடுக்கச் சொல்லி இருக்கிறார். 

பின்னர், அடுத்தடுத்து அந்த அதிகாரியைச் சந்தித்து நட்பை ஏற்படுத்திக் கொண்ட சத்யாபாமா, ஹோட்டல்கள் அல்லது உணவகங்கள் அல்லது அவரது வீட்டிற்குச் சென்று அவரை தொடர்ச்சியாக சந்தித்து வந்திருக்கிறார். 

அந்த தருணங்களில் உணவருந்தும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, “இவர் தான் எனது கணவர்” என்று, கூறி வந்திருக்கிறார்.

தொடக்கத்தில், சம்மந்தப்பட்ட ஆண்களிடம் “வீட்டு வாடகை, மருத்துவச் செலவுகள், குழந்தை பள்ளி கட்டணம்” என்று, பணம் கேட்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் சத்யாபாமா, ஒரு கட்டத்திற்குப் பிறகு சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாரிடம் காட்டப் போவதாகக் கூறி ஒரே அடியாகப் பல லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதையே வழக்கமாகக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியதில், “மயிலாடுதுறையைச் சேர்ந்த தங்கராஜ் என்பவருடன், கடந்த 2001 ஆம் ஆண்டு சத்யபாமாவுக்கு திருமணம் நடந்த நிலையில், பல ஆண்களுடன் சட்ட விரோதமாக உறவாடும் பழக்கத்தால் கடந்த 2006 ஆம் ஆண்டு இவரது திருமணம் விவாகரத்தில் முடிந்திருக்கிறது. 

இந்த திருமண வாழ்க்கையில் சத்யபாமாவுக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். 

இதனையடுத்து, கும்பகோணம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமை மேலாளருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, அவரிடம் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார். 

இப்படியாக, சத்யபாமாவால் பாதிக்கப்பட்டவர்களின் லிஸ்ட் பெரிதாக அவர்களில் பலரும் காவல் நிலையத்தில் அடுத்தடுத்து புகார் அளித்தனர்.

இதனால், சென்னையில் வசித்து வந்த சத்யபாமா, தற்போது புதுச்சேரிக்கு குடிபெயர்ந்து உள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சத்யபாமாவிடமே விசாரிக்கையில், “நீங்க சொல்ற எல்லா ஆம்ளைங்களுமே எனக்குத் தெரிந்தவர்கள் தான். அவர்கள் எல்லோரும் என்னைப் பயன்படுத்தித் தூக்கி எரிந்து விட்டார்கள் என்றும், கடைசியில் நான் தான் யாரும் இல்லாமல் நிற்கிறேன் என்றும், எல்லாமே என் தவறு தான்” என்றும், கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இச்சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.