முதல் முறையாக 18 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கிய விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி 6 வாரங்களை கடந்து 12 போட்டியாளர்களுடன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  பிக்பாஸ் வீட்டின் இந்தவார கேப்டன்சி டாஸ்க்கில் வெற்றிபெற்று முதல்முறையாக பிரியங்கா கேப்டனாகியுள்ளார்.

இதனையடுத்து இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் நடைபெற்றது. இதில், அபிநய், அக்ஷரா, சிபி, இமான் அண்ணாச்சி, இசைவாணி, ஐக்கி பெர்ரி, தாமரை, பாவனி மற்றும் நிரூப் ஆகியோர் எலிமினேஷனுக்கு தேர்வாகியுள்ளனர். இந்த வாரம் நீரின் ஆற்றலுக்கான வாரம் என்பதால் தண்ணீர் மற்றும் பாத்ரூம் நீர் நாணயத்தை வைத்திருக்கும் வருணின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க்கில் ஒவ்வொரு போட்டியாளர்களும் மற்றொரு போட்டியாளரின் கண்ணாடிகளாக செயல்பட்டனர். அந்த வகையில் அபிநயின் கண்ணாடியாக நேற்று(நவம்பர் 16) நிரூப் செயல்பட நிரூப்பை தோற்கடிக்க அபிநய் எடுக்கும் முயற்சிகளில் ஒன்றாக நிரூப்பின் முடியை வெட்டும் விதமாக அபிநய் திட்டம் தீட்ட இருவருக்கும் இடையில் மிகப்பெரிய விவாதம் வெடித்தது.

முன்னதாக இன்றைய (நவம்பர் 17) நிகழ்ச்சியில் பாவனிக்கும் ராஜுவுக்கும் இடையில் காரசார விவாதம் நடைபெறும் ப்ரோமோ இன்று வெளியான நிலையில், ராஜு, பிரியங்காவின் கண்ணாடியாக பிரியங்காவை கலாய்த்து தள்ளும் புதிய ப்ரோமோ வீடியோ சற்று முன்பு வெளியானது. அந்த ப்ரோமோ வீடியோ இதோ…