தனது மகள் வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டதால், கடும் ஆத்திரமடைந்த தந்தை ஒருவர், தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் சாஜபூர் மாவட்டத்தில் இளம் பெண் ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

அப்போது, படிக்கும் போது தன்னுடன் படித்த வேறு சாதி இளைஞனை அந்த இளம் பெண் காதலித்து, பெற்றோரின் எதிர்பையும் மீறி திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் அந்த இளம் பெண் வசித்து வந்தார். 

இப்படியான சூழலில், வேலை நிமித்தமாக அந்த இளம் பெண்ணின் கணவர், சத்தீஸ்கர் மாநிலத்திற்குச் சென்றிருக்கிறார். 

இந்த நிலையில் தான், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வந்த தீபாவளி பண்டிகை பண்டியின் போது, தீபாவளி பண்டிகையைக் கொண்டாடத் தனது மூத்த சகோதரி வீட்டிற்குத் தனது கைக்குழந்தையுடன் அந்த பெண் சென்றிருக்கிறார். 

அங்கு சென்ற பிறகு, கைக்குழந்தைக்கு நிமோனியா காய்ச்சல் வந்திருக்கிறது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளது.

தனது குழந்தை உயிரிழந்ததால், என்ன செய்வது என்று தெரியாமல் அந்த பெண் தனது தந்தைக்கு போன் செய்து பேசியிருக்கிறார். 

“எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் வேறு சாதி இளைஞனை திருமணம் செய்து கொண்டதால், கடும் ஆத்திரத்தில் இருந்த அந்த பெண்ணின் தந்தை, மகள் எங்கே இருக்கிறார் என்று தேடிக் கொண்டிருந்த நிலையில், அவருக்கே அந்த பெண் போன் செய்து பேசியதால், அந்த தந்தை உடனே புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.

அங்கு, தனது மகளைப் பார்த்ததும் உயிரிழந்த கைக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு மகளையும் அழைத்துக்கொண்டு புதைப்பதற்காக அங்குள்ள ஒரு காட்டுப்பகுதிக்குச் சென்றிருக்கிறார். 

அந்த காட்டுப் பகுதிக்குச் சென்றதும், “வேறு ஜாதி இளைஞனுடன் ஏன் ஓடிப் போன?” என்று, கடும் கோபமாகச் சண்டை போடத் தொடங்கிய அவர் ஒரு கட்டத்தில் கடும் ஆத்திரமடைந்த நிலையில் தான் பெற்ற மகள் என்றும் பார்க்காமல், தனது மகளை அவர் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

மகளை பாலியல் பலாத்காரம் செய்த பிறகு, தனது மகளின் கழுத்தை நெரித்து அவர் கொடூரமான முறையில் கொலை செய்திருக்கிறார்.

அதன் பிறகு, ஏற்கனவே உயிரிழந்த கைக்குழந்தை மற்றும் கொலை செய்த மகள் ஆகிய இருவரையும் அங்கு புதைத்துவிட்டு, அங்குள்ள காவல் நிலையத்திற்கு வந்து, தனது மகளைக் காணவில்லை என புகார் அளித்திருக்கிறார்.

இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், 10 நாட்களுக்குப் பிறகு வனத்துறை அதிகாரிகள் புதைக்கப்பட்ட சடலங்களை எடுத்து உள்ளனர். 

இது தொடர்பாக நடந்த விசாரணையில், சாதி வெறியால் பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்து, தந்தையே கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உண்மையை, அந்த தந்தையும் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.