உலக அளவில் சூப்பர் ஹீரோ திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி ஆர்வம் உண்டு. குறிப்பாக மார்வெல் ஸ்டுடியோஸின் சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் மார்வெல் ஸ்டுடியோவின் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக ரிலீசாகிறது ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் திரைப்படம்.

மார்வெல் ஸ்டுடியோஸில் அயன் மேன், கேப்டன் அமெரிக்கா, தோர், ஹல்க், பிளாக் பேந்தர் என பல முன்னணி சூப்பர் ஹீரோக்களுக்கு தனித்தனியாக மிகப்பெரிய ரசிகர் படங்கள் இருக்கும் நிலையில், அனைத்து மார்வெல்ஸ் ரசிகர்களுக்கும் பிடித்த செல்லமான சூப்பர் ஹீரோவான ஸ்பைடர் மேன் எப்போதும் ஸ்பெஷல் தான்.

முன்னதாக கடந்த 2019-ஆம் ஆண்டு ஸ்பைடர் மேன் ஃபார் ஃப்ரம் ஹோம் திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதையடுத்து ஜான் வாட் இயக்கத்தில், கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் திரைப்படம் வருகிற டிசம்பர் 17ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

ரசிகர்களின் ஃபேவரைட்டான மற்றொரு சூப்பர் ஹீரோ கதாபாத்திரமான டாக்டர் ஸ்ட்ரேஞ் கதாபாத்திரத்தில் பெனடிக்ட் கம்பர்பேர்ட்ச் மற்றும் ஸ்பைடர் மேனாக டாம் ஹாலண்ட் இணைந்து நடித்துள்ள இத்திரைப்படத்தில் ஸ்பைடர்மேன் சீரிஸின் வில்லன்களான க்ரீன் கோப்லின், டாக்டர் ஆக்டோபஸ், சேண்ட்மேன், எலக்ட்ரோ ஆகியோர் மீண்டும் களமிறங்கியது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படத்தின் மிரட்டலான புதிய ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அதிரடியான அந்த ட்ரைலர் இதோ…