விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வார தொடக்கத்தில் அனல் பறக்க நடைபெற்ற இந்த வார கேப்டனுக்காண போட்டியில் பிரியங்கா வெற்றிப் பெற்று முதல் முறையாக பிக்பாஸ் வீட்டின் கேப்டன் ஆனார்.

தொடர்ந்து நடைபெற்ற நாமினேஷன் ப்ராசஸில் அபிநய், அக்ஷரா, சிபி, இமான் அண்ணாச்சி, இசைவாணி, ஐக்கி பெர்ரி, தாமரை, பாவனி மற்றும் நிரூப் ஆகியோர் எலிமினேஷனுக்கு தேர்வாகியுள்ளனர். இதனையடுத்து நேற்று இந்த வாரத்திற்கான லக்சரி பட்ஜெட் டாஸ்க் தொடங்கியது.

இந்த லக்சரி பட்ஜெட் டாஸ்க்கில் அபிநய், நிரூப்பின் கண்ணாடியாகவும் சிபி, அக்ஷராவின் கண்ணாடியாகவும் பாவனி, ராஜுவின் கண்ணாடியாகவும் இசைவாணி, இமான் அண்ணாச்சியின் கண்ணாடியாகவும் செயல்பட்டனர். கலகலப்பாக நடந்து வந்த இந்த டாஸ்க் இல் அபிநய் மற்றும் நிரூப் இடையே நேற்று காரசார விவாதங்கள் எழுந்தது.

இதனையடுத்து இன்றைய நிகழ்ச்சியில் ராஜு மற்றும் பாவனி இடையே அனல் பறக்கும் விவாதங்கள் எழுகின்றன. இதில் பாவனி, ராஜுவை Influence செய்வதாக குற்றம் சாட்ட , ராஜு "உன்கிட்ட டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்றது தான் சரி" எனப் பேசும் ப்ரோமோ சற்று முன் வெளியானது. அந்த ப்ரோமோ வீடியோ இதோ…