சேலம் டிஎஸ்பியின் கார் ஓட்டுநரான போலீஸ் ஏட்டு ஒருவர், ரயில்வே பெண் போலீசை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, ஈரோடு பழைய ரயில் நிலையம் பகுதியை சேர்ந்த 32 வயதான செல்வன் என்பவர், போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். 

இவர், சேலம் புறநகர் காவல் துறை துணை கண்காணிப்பாளரின் (டிஎஸ்பி) ஜீப் டிரைவராக பணியாற்றி வருகிறார். 

இவரது மனைவி, ஈரோடு ரயில்வே போலீசாக பணியாற்றி வருகிறார். இதனால், போலீஸ் ஏட்டு செல்வன், ஈரோட்டுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். 

அப்படி, அடிக்கடி மனைவியை பார்க்க ஈரோட்டிற்கு வந்து செல்லும் போது, போலீஸ் ஏட்டான செல்வனுக்கு ஈரோட்டைச் சேர்ந்த 29 வயதான பெண் போலீஸ் ஒருவருடன் நட்பு ஏற்பட்டு உள்ளது. 

அந்த பெண் போலீசார், அங்கு ரெயில்வே போலீசில் பணியாற்றி வருகிறார். அத்துடன், கணவரை பிரிந்து தனியாக வசித்து வரும் இந்த பெண் போலீஸ்க்கு குழந்தை இல்லை. 

இந்த சூழலில் தான் இந்த ரயில்வே பெண் போலீசிடம், போலீஸ் ஏட்டு செல்வன் நட்பாக பழகி வந்தார்.

இதனையடுத்து, அவர்கள் இருவரும் தொடர்ந்து நட்புடன் பழகி வந்து உள்ளனர். அடிக்கடி, இவர்கள் இருவரும் செல்போனில் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில் தான் எப்போதும் போல தனது மனைவியை பார்க்க வந்த போலீஸ் ஏட்டு செல்வன், அங்கிருந்து கிளம்பும் போது, தனது தோழியான ரயில்வே பெண் போலீசின் வீட்டிற்கு சென்று உள்ளார்.

அப்போது, அந்த ரயில்வே பெண் போலீஸ் தனது வீட்டில் தனியாக படுத்திருந்தார். இதனையடுத்து, அந்த ரயில்வே பெண் போலீசை, போலீஸ் ஏட்டு செல்வன், பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த ரயில்வே பெண் போலீஸ், சத்தம் போட்டு கத்தியபடியே அவரது பிடியில் இருந்து தப்பித்து வெளியே ஓடி வந்த உள்ளார். 

அத்துடன், அங்குள்ள அக்கம் பக்கத்தினரின் வீட்டு கதவை தட்டிய அந்த பெண் போலீஸ், அவர்களிடம் உதவி கேட்டு உள்ளார்.

இதனையடுத்து, இது குறித்து உடனடியகா அங்குள்ள சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து விரைந்து வந்த காவல் ஆய்வாளர் விஜயா, சம்பவ இடத்திற்கு வந்து தீவிரமாக விசாரணை நடத்தினார். 

இதனையடுத்து, “வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல் விடுத்தல், தவறாக நடக்க முயற்சி செய்தல், பெண் வன்கொடுமை தடைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ்” செல்வன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை அதிரயடியாக கைது செய்தனர்.

இதனையடுத்து, போலீஸ் ஏட்டு செல்வனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, சேலம் டிஎஸ்பியின் கார் ஓட்டுநரான போலீஸ் ஏட்டு, ரயில்வே பெண் போலீசை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் தமிழ்நாடு முழுவதும் சக போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.