தமிழ் திரையுலகில் தன்னிகரில்லா நாயகர்களில் ஒருவர் அஜித் இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிப்பு மட்டுமின்றி கேமரா, சமையல், கார், பைக் ரேஸ் போன்றவற்றில் அதிகம் ஆர்வமுடையவர்.இவர் நடிப்பில் தயாராகியுள்ள வலிமை படம் 2022 பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.இந்த படத்தினை சதுரங்க வேட்டை,தீரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய எச் வினோத் இயக்கியுள்ளார்.இதற்கு முன் இதே கூட்டணியின் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.ஹுமா குரேஷி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துளளார்.குக் வித் கோமாளி புகழ்,யோகி பாபு,ராஜ் அய்யப்பா,சுமித்ரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் பாடல்கள்,ட்ரைலர் உள்ளிட்டவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

இந்த படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் வெளியாகும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் ஹிந்தி மற்றும் தெலுங்கு பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.