தமிழ் திரைஉலகில் பிரபல பைனான்சியர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு அதிபராக வலம் வருபவர் G.N.அன்புச் செழியன். திரை உலகில் பல திரைப்படங்களுக்குப் பைனான்ஸ் செய்துள்ள G.N.அன்புச்செழியன் அவர்கள் தனது கோபுரம் பிலிம்ஸ் சார்பாக பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். குறிப்பாக விநியோகஸ்தராக தனது கோபுரம் பிலிம்ஸ் சார்பாக அஜித்குமார் கதாநாயகனாக நடித்திருக்கும் வலிமை திரைப்படத்தை வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது

இதனிடையே தயாரிப்பாளர் G.N.அன்புச்செழியனின் மகள் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது.  இளம் தொழில்முனைவோரும் கோபுரம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான சுஷ்மிதா சென்னையில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் உளவியல் பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றவர். தொடர்ந்து எம்பிஏ படித்து முடித்த சுஷ்மிதா 25 வயதில் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் நிர்வாகித்து பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார்.

தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் மைத்துனரும், குடிமையியல் தேர்வுகளுக்கான பயிற்சி நிறுவனங்களில் முன்னிலை வகிக்கும் சன் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனருமான ராஜேந்திரன் ஐஏஎஸ்-ன் மகன் சரண் பி டெக் மற்றும் எம்பிஏ படித்து முடித்து சன் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குனராக திகழ்கிறார்.

இந்நிலையில் வருகிற பிப்ரவரி 21ம் தேதி திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இளம் தொழில்முனைவோரும், கோபுரம் சினிமாஸ் உரிமையாளருமான சுஷ்மிதா மற்றும் சன் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் சரணின் திருமணம் நடைபெறவுள்ளது.திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கும் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி கொவிட் விதிமுறைகளை பின்பற்றி பிரமாண்டமாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.