தனக்கே உரித்தான ஸ்டைலான நடனத்தால் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் ராகவா லாரன்ஸ் நடிகர், இயக்குனர் என பன்முக தன்மை கொண்ட கலைஞராக குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்விக்கும் விதமாக பல மெகா ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து வருகிறார்.

முன்னதாக FiveStar கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் S.கதிரேசன் இயக்குனராக களமிறங்கும் ருத்ரன் படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் ராகவா லாரன்ஸ், இயக்குனர் வெற்றிமாறனின் கதை திரைக்கதையில், இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கும் அதிகாரம் படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ராகவா லாரன்ஸின் சூப்பர் ஹிட் திரைப்படங்களான முனி - காஞ்சனா சீரிஸ் வரிசையில் அடுத்ததாக தயாரகவுள்ளது துர்கா. ராகவா லாரன்ஸின் ராகவேந்திர புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளிவந்தது.  அந்த வகையில் துர்கா படத்தின் இயக்குனர்களை ராகவா லாரன்ஸ் தற்போது அறிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டாரின் கபாலி, கே ஜி எஃப், கார்த்தியின் கைதி உள்ளிட்ட பல படங்களில் ஸ்டண்ட் இயக்குனர்களாக கவனம் ஈர்த்த, தமிழ் திரையுலகின் முன்னணி ஸ்டண்ட் இயக்குனர்களாக திகழும் இரட்டை சகோதரர்களான அன்பறிவு மாஸ்டர்ஸ் தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் மற்றும் தளபதி விஜய்யின் பீஸ்ட்  ஆகிய படங்களிலும் பணியாற்றி வருகின்றனர் இந்நிலையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் துர்கா திரைப்படத்தின் மூலம் அன்பறிவு மாஸ்டர்ஸ் இயக்குனர்களாக களம் இறங்குகிறார்கள் என ராகவா லாரன்ஸ் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.அந்த அறிவிப்பு இதோ…