விஜய் டிவியில் ஒளிபரப்பான பெரிய ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ்.இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக வந்து மக்கள் மத்தியில் பிரபலமானவராக மாறியவர் முகென் ராவ்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது பல திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினார் முகென்.

இதனை தொடர்ந்து இவருக்கு பல வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன.தமிழ் சினிமாவில் ஹீரோ அவதாரமும் எடுத்துள்ளார் முகென்.வேலன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் முகென் ராவ்.மீனாட்சி கோவிந்தராஜன் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.

பிரபு,சூரி,தம்பி ராமையா,பிரிகிடா,ராகுல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தியுள்ளனர்.இந்த படத்தினை கவின் இயக்கியுள்ளார்.கோபி சுந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.

இந்த படம் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் ஓப்பனிங் பாடல் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த பாடல் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்