“மக்களின் எதிர்பார்ப்புகளையும், கனவுகளையும் தொடர்ந்து நிறைவேற்றி இந்தியாவிலேயே மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்படும் மாநிலமாக மட்டுமன்றி தெற்காசிய நாடுகளுக்கே முன்னுதாரணமாக நமது மாநிலத்தை உருவாக்குவோம்” என்று, தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை எழுச்சி உரை ஆற்றி உள்ளார்.

2022 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம், சென்னை கலைவாணர் அரங்கில் தற்போது நடைபெற்று வருகிறது. 

காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கிய முதல் சட்டப்பேரவை கூட்டத்தில், தமிழகத்தின் புதிய ஆளுநரான ஆர்.என்.ரவி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது, “வணக்கம்” என்று, தமிழில் பேசிய தனது உரையைத் தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழ்நாடு சட்டப்பேரவை மிகப்பெரிய பாரம்பரியங்களைக் கொண்டது” என்று, பெருமையோடு குறிப்பிட்டார்.

அத்துடன், “கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முதலமைச்சர் சிறப்பாக மேற்கொண்டு வருவதாகிறார் என்றும், ஒமிக்ரான் பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது” என்றும், சுட்டிக்காட்டினார்.

மேலும், “சமீபத்திய ஆய்வு முடிவில், இந்தியாவின் சிறந்த முதலமைச்சராக நமது தமிழ்நாடு முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவிப்பதாகவும்” ஆளுநர் ஆர்.என்.ரவி புகழராம் சூட்டினார்.

ஆளுநர் உரையின் ஹைலைட்ஸ்

- சென்னை உள்ளிட்ட நகரங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மழை பெய்ததாகவும், இருப்பினும், நீர்த்தேக்கங்களில் இருந்து முன்கூட்டியே நீர் திறந்துவிடப்பட்டு சென்னை நகரம் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டதாகவும், ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

- ஒமிக்ரான் பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

- குறிப்பாக, கொரொனா தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

- கொரொனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்தியதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 

- தமிழக அரசு சார்பில் மழை வெள்ள பாதிப்பு மற்றும் சீரமைப்பு பனிகளுக்காக 6,230 கோடி ரூபாய் மத்திய அரசிடம் கேட்டுள்ளது.

- பாதியில் பள்ளியை நிறுத்திய 73 ஆயிரம் மாணவர்கள் பள்ளியில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

- பள்ளி கல்லூரி அருகே போதைப்பொருள் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

- அரசு பள்ளிகளை நவீனமாக்கிட ஒரு மாபெரும் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.

- பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம் தொடர்ந்து நடைப்பெறும்.

- சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு, அன்புடைமை போன்ற தத்துவங்களை தமிழக அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றது.

- பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகிய உன்னதமான தலைவர்களின் சிந்தனைகள் இந்த அரசின் வழித்தடத்தை தீர்மானிக்கின்றன.

- தமிழ்நாட்டில் மீண்டும் மஞ்சப்பை திட்டம் கொண்டு வந்தமைக்கு பாரட்டுக்கள்.

- ஒரகடத்தில் மருத்துவ பூங்கா அமைக்கும் பணி நடைப்பெற்று வருவதற்கு பாராட்டுக்கள்.

- விவசாயிகளின் வளர்ச்சிக்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

- கர்நாடக அரசு, மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது என மத்திய அரசுக்கு வலியுறுத்தி உள்ளேன்.

- இலங்கை சிறையில் உள்ள 68 மீனர்வர்களை விடுவிக்க நடவடிக்கை உடனே தேவை.

- ஜிஎஸ்டி வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது எனவும் குறிப்பிட்டார்

- இலங்கை சிறையில் உள்ள 68 மீனவர்களை விடுவிக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

- 2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு லட்சம் கோடி டாலர் என்ற இலக்கை அடைய வேண்டும் என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார்.

- இன்னுயிர் காப்போம், நம்மை காப்போம் 48  என்ற உன்னதத் திட்டத்தை இந்த அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் 4,482 பேர் இது வரை அவசர சிகிச்சை பெற்று உள்ளனர்.

- நுழைவுத் தேர்வுகள் கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு சமனற்ற தளத்தையும் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன. 

- தொழிற் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் தேவையற்றது என்ற அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

என்று, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டமன்றத்தில் முதன் முறையாக தனது உரையை நிகழ்த்தினார்.