வேட்பு மனுவில் ஓபிஎஸ் தவறான தகவலை அளித்தாரா?” என்பது குறித்து விசாரிப்பதற்காக 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு உள்ளது.

அதாவது, கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது, தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்டி இட்டார். அந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் திமுக அமொகமாக வெற்றிப் பெற்ற நிலையில், தேனி தொகுதியில் மட்டும் ரவீந்திரநாத் வெற்றி பெற்றது, அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி பாக்க வைத்தார்.

அதே போல், கடந்த சட்ட மன்ற தேர்தலில் போடி நாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், இந்த இரு தேர்தல் நடைபெற்ற போதிலும், தேர்தல் சமயத்தில் தங்களுக்கு சொந்தமான சொத்து உள்ளிட்டவை குறித்து உண்மையான தகவல்களை மறைத்து தவறான தகவல்களை அவர்கள் இருவரும் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்றும், இதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளன என்றும், தேனி மாவட்ட முன்னாள் திமுக இளைஞரணி அமைப்பாளர் குற்றம்சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் அவரது மகன் ரவீந்திரநாத் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், தேனி மாவட்ட முன்னாள் திமுக இளைஞரணி அமைப்பாளர் வழக்குத் தொடர்ந்திருந்த நிலையில், தேனி மாவட்ட குற்றப் பிரிவு போலீசாருக்கு நீதிபதி அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார்.

அதன் படி,  “ஓ. பன்னீர்செல்வம் மீதும், அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் மீதும் வழக்குப் பதிவு செய்ய” நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.

அத்துடன், இந்த வழக்கை தேனி மாவட்ட குற்றப் பிரிவுக்கு மாற்றவும் நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.

மேலும், “இந்த வழக்கின் இறுதி விசாரணை அறிக்கையை வரும் பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்றும், நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டு இருந்தார்.

குறிப்பாக, “இந்த வழக்கை தொடர்ந்திருக்கும் தேனி மாவட்ட முன்னாள் திமுக இளைஞரணி அமைப்பாளர் மிலானிக்கு, தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றும், நீதிபதி அதிரடியாக தனது உத்தரவில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தான், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீதான வழக்கை விசாரிக்க, தேனி மாவட்ட குற்றப் பிரிவு துணை கண்காணிப்பாளர் சுந்தர்ராஜ் தலைமையில், 5 பேர் கொண்ட குழு தற்போது அமைக்கப்பட்டு உள்ளது.
 
குறிப்பாக, “இந்த வழக்கைத் தொடர்ந்த மிலானிக்கு, நீதிபதியின் உத்தரவின் பேரில் 4 பேர் கொண்ட காவலர் குழு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 

இதன் காரணமாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மீதும் அவரது மகனும் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மீதும் விசாரணை நடைபெற உள்ளன. இந்த நிகழ்வு, அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே, முன்னாள் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி. ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவரிடம் குற்றப்பிரிவு போலீசார் இன்று விசாரணையை தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.