ஆகச் சிறந்த நடன இயக்குனராகவும், பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுக்கும் இயக்குனராகவும் இந்திய திரையுலகில் வலம் வரும் பிரபுதேவா நடிகராகவும் தொடர்ந்து மக்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக குழந்தைகள் கொண்டாடும் கலகலப்பான ஃபேன்டசி திரைப்படமாக பிரபுதேவா நடித்துள்ள மை டியர் பூதம் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் ரெஜினா கெஸன்ட்ராவுடன் இணைந்து ஃபிளாஷ்பேக் திரைப்படத்திலும் பிரபுதேவா நடித்து வருகிறார்

முன்னதாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வித்தியாசமான பல கெட்டப்களில் பிரபுதேவா நடித்துள்ள சைக்கோ த்ரில்லர் திரைப்படமான பஹீரா இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இயக்குனர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கத்தில் மாற்றுத்திறனாளியாக மிரட்டலான கதாபாத்திரத்தில், பிரபுதேவா நடித்துள்ள பொய்க்கால்குதிரை ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இதனிடையே பிரபுதேவா நடிப்பில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வெளிவருகிறது தேள் திரைப்படம். முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் சார்பில், தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜா தேள் படத்தை தயாரித்துள்ளார். இயக்குனர் ஹரிகுமார் இயக்கத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து சம்யுக்தா, ஈஸ்வரி ராவ்,யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

தேள் படத்திற்கு விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்ய, சி.சத்யா இசையமைத்துள்ளார். வருகிற ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் வெளியீடாக உலகமெங்கும் திரையரங்குகளில் தேள் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் தேள் திரைப்படத்திலிருந்து மாதவி பொன் மயிலாக எனும் பாடல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த பாடல் வீடியோ இதோ…