இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் ஆல் ரவுண்டராக வலம் வருபவர், 22 வயதான வாஷிங்டன் சுந்தர். 

பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் தன்னை சிறந்த ஆல் ரவுண்டர் என்று நிறுபித்துக்கொண்டிக்கொண்டிருக்கும் வாஷிங்டன் சுந்தர், தென்னாப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டார்.

அப்படியான, இந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு, தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

இதன் காரணமாக, தென் ஆப்பிரிக்காவுக்கா உடனான ஒரு நாள் தொடரில் அவர் பங்கேற்பதில் பெரும் சந்தேகம் எழுந்து உள்ளது. இதானல், அவருக்கு பதிலாக வேறு வீரர் களம் இறக்கப்படுவாரா என்கிற கேள்வியும் எழுந்து உள்ளது. ஆனாலும், இன்னும் இது தொடர்பாக பிசிசிஐ எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

அதாவது, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கும் வீரர்கள் அனைவரும் இன்று மும்பையில் முகாமிட்டு இருந்தனர். 

அதன்படி, இன்னும் ஒரு சில தினங்களில் அவர்கள் தென் ஆப்பிரிக்கா புறப்பட்டுச் சென்று விளையாவார்கள் என்று கூறப்பட்டு வந்தது. 

இந்த சூழலில் தான், 22 வயதான இளம் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனால், அவர் இந்திய அணியின் பிற வீரர்களுடன் தனி விமானத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

என்றாலும், வாஷிங்டன் சுந்தர் மட்டும் தனியாக மாற்று தேதியில் தென் ஆப்பிரிக்கா அனுப்பி வைக்கப்படுவாரா?” என்பது பற்றிய தவலும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது தொடர்பாக எந்த தகவலையும் பிசிசிஐ தெளிவாக வெளியிடவில்லை. 

எனினும், காயம் காரணமாக கடந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் இருந்து விலகிய வாஷிங்டன் சுந்தர், காயத்திலிருந்து குணம் அடைந்த பிறகு உள்ளூர் போட்டிகளில் களம் இறங்கி விளையாடி வந்தார். 

அதன்படி, விஜய் ஹசாரே போட்டியில் மிகவுமு் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர், தென் ஆப்பிரிக்கா சுற்றுப் பயணம் செய்து விளையாடத் தேர்வாகி இருந்த நேரத்தில், அதுவும் கடைசி நேரத்தில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு, தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகிறார். இதனால், தமிழக கிரிக்கெட் ரசிர்கள் பெரும் கவலை அடைந்து உள்ளனர்.