அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர், இளம் பெண்ணை ஆபாசப் படம் எடுத்து மிரட்டியே கழுத்தில் தாலி கட்டி, 2 வதாக திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி அருகே தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்து உள்ள கதிர்நரசிங்காபுரத்தை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் 39 வயதான அருள் குமரன், ஆண்டிபட்டி கன்னியப்பிள்ளைபட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற் கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

அரசு மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரான 39 வயதான அருள் குமரனுக்கு, மதுரையைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு முறைப்படி திருமணம் நடைபெற்றது. தற்போது, இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

ஆனால், தற்போது கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து தனித் தனியாக வசித்து வரும் நிலையில், இருவரும் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தான், கொடைக்கானல் அருகே உள்ள பண்ணைக்காடு அடுத்து உள்ள ஊரல் பட்டியைச் சேர்ந்த லோகநாதனின் மனைவியான 54 வயதான சுமதி, தனது மகளான 27 வயதான இளம் பெண்ணுடன் வந்து உடற்கல்வி ஆசிரியரான அருள் குமரன் வீட்டில் கடந்த சில நாட்களாகத் தங்கி இருந்து உள்ளார்.

அதாவது, 54 வயதான சுமதியின் கணவர் சகோதரியுடன் ஏற்பட்ட சொத்துப் பிரச்சனையால் தொடரப்பட்ட வழக்கில், முன் ஜாமீன் கிடைக்கும் வரை சில நாட்கள் வேறு இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, தனது சகோதரனின் நண்பனான அருள் குமரன் வீட்டில் சுமதி கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுமார் 15 நாட்கள் தங்கி உள்ளார்.‌

அப்போது, சுமதியின் மகளான 27 வயது இளம் பெண்ணும், தனது அம்மாவுடன் வந்து தங்கியிருக்கிறார்.

இப்படியாக, உடற்கல்வி ஆசிரியரான அருள் குமரன் வீட்டில் தங்கியிருந்த நாட்களில், அந்த 27 வயதான இளம் பெண் குளிக்கும் போது அதனை ரகசிய கேமரா மூலமாக உடற்கல்வி ஆசிரியரான அருள் குமரன் போட்டோஸ் எடுத்து வைத்துக்கொண்டு, அதனை வைத்தே, அந்த இளம் பெண்ணை தொடர்ந்து மிரட்டி வந்திருக்கிறார்.

மேலும், “தனது ஆசைக்கு இணங்க மறுத்தால் இந்த புகைப்படங்களை எல்லாம், சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உன்னை அசிங்கப்படுத்தி விடுவேன்” என்று, அவர் மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, “ஏற்கனவே வேறொரு பெண்ணுடன் திருமணமான அரசுப் பள்ளி ஆசிரியர் அருள் குமரன், எனது 27 வயது மகளை செய்ததாகவும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

அந்த புகார் மனுவில், “வேறொரு பெண்ணுடன் திருமணமான அரசுப் பள்ளி ஆசிரியர் அருள் குமரன், எனது 27 வயது இளம் பெண்ணுடன் திருமணம் ஆனது போல் கழுத்தில் தாலி கட்டியவாறு புகைப்படம் எடுத்துக் கொண்டு, எங்களை மிரட்டி வருகிறார்” என்றும், குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும், “நீ வேறு யாரையும்  திருமணம் செய்யக்கூடாது என்றும், இவற்றுடன் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் எங்களை மிரட்டி வருகிறார்” என்றும், குற்றம்சாட்டி உள்ளார்.

“இதற்கு அவரது குடும்பத்தினரும் உடந்தையாக இருந்தனர்” என்றும், சுமதி குற்றம்சாட்டி உள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில் சம்மந்தப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் அருள் குமரன், அவரது பெற்றோர் சரோஜா, முருகேசன் மற்றும் தங்கை மீனா ஆகிய 4 பேர் மீதும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். 

முக்கியமாக, இந்த வழக்கில் முதற்கட்டமாக அரசுப் பள்ளி உடற் கல்வி ஆசிரியர் அருள் குமரனை அதிரடியாக கைது செய்த மகளிர் போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெரியகுளம் கிளைச் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.