காஞ்சிபுரத்தில் ரவுடிகள் அட்டகாசம் இரண்டு மணி நேரத்திற்குள் வெவ்வேறு பகுதியில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு ஒரு சூப்பர் மார்க்கெட் கடை சூறையாடப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். 

rowdiesகாஞ்சிபுரத்தில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலை தெருவில்  அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட்டை 8 பேர் கொண்ட  கும்பல் சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள் 4 பேருக்கு வெவ்வேறு பகுதியில் அருவாள் வெட்டு இதனால் காஞ்சிபுரத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து கம்போடியாவில் கடந்த 2017-ல் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியான ஸ்ரீதர் மறைவுக்குப் பிறகு காஞ்சிபுரம் அமைதியாக இருந்தது. ஆனால், ஸ்ரீதர் மறைவுக்குப் பிறகு காஞ்சிபுரத்தில் ஸ்ரீதர் போல கோலோச்ச வேண்டும் என தியாகு மற்றும் தினேஷ் இவர்களுக்குள் போட்டி ஏற்பட்டது இதனால் தொடர் கொலைகள் காஞ்சிபுரத்தில் அரங்கேறி வந்தது.

மேலும் மறைந்த ரவுடி ஸ்ரீதரை போலவே ஸ்ரீதரின் ஆதரவாளர்கள் சமீப நாட்களாக காஞ்சிபுரத்தில் உள்ள தொழில் அதிபர்களையும், வசதி படைத்தோரையும், லட்சக்கணக்கில் பணம் கேட்டு, போன் மூலம்  மிரட்டி வருவதாக தகவல்வெளியாகியுள்ளது மிரட்டலுக்கு ஆளான பலரும் புகார் தர மறுப்பதால், போலீசார் செய்வதறியாது  விழி பிதுங்குகின்றனர். 

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் சாலை தெரு பகுதியில் ஸ்ரீராம் என்பவர் சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகிறார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீராமிடம்  மறைந்த ஸ்ரீதரின் அடியாட்கள் லட்சக்கணக்கில் மாமுல் கேட்டு மிரட்டி வந்ததாக கூறப்பட்டு வந்தது பணம் தராத நிலையில் ஸ்ரீதரின் ஆதரவாளரான ஜெமினி ஜெகன் உள்ளிட்ட கும்பல் கையில் கத்தியுடன் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக கடையில் உள்ள பொருட்களை தாக்கி விட்டு கடையை சூறையாடினர் இதற்கு முன்பாக
 ஸ்ரீதரின் கூட்டாளியான ஏட்டு பிரபு என்பவரின் வீட்டுக்கு சென்ற பிரபல ரவுடி தினேஷின் ஆதரவாளர்கள் ஏட்டு பிரபுவின் இரண்டு மகன்களையும் கமலேஷ், ஜனார்த்தன் ஆகியோர்களை வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக வெட்டியுள்ளனர் உயிருக்கு ஆபத்தான நிலையில் காயமடைந்த இருவரையும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதன்பிறகு சாலைத் தெருவில் உள்ள வீரலட்சுமி என்ற சூப்பர் மார்க்கெட்டின் கடையை அடித்து நொறுக்கி விட்டு அடுத்ததாக சிறுவாக்கம் பகுதியில் ராஜமன்னார் மற்றும் வெங்கடேசன் ஆகிய 2 பேரையும் வெட்டி விட்டு ரவுடி ஜெமினி, ஜெகன் உள்ளிட்ட ஐந்து நபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.

அதன்பின் மறைந்த ஸ்ரீதருக்கு பிறகு அவரைப் போலவே காஞ்சிபுரத்தில் கோலோச்ச தியாகு  மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் போட்டி போட்டு வருகிறார்கள் இந்த இரு ரவுடிகளின் ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் கண்மூடித்தனமாக வெட்டி படுகொலை செய்து வருகிறார்கள். திருப்பருத்திக்குன்றம், பல்லவர்மேடு, பொய்யாக்குளம், திருக்காலிமேடு, குண்டுகுளம் போன்ற பகுதிகள் ரவுடிகளின் புகலிடமாகவும் உள்ளது. இப்பகுதிகளில் நடைபெறாத குற்ற சம்பவங்களே இல்லை என கூறும் அளவிற்கு, கொலை, அடிதடி, சாராய விற்பனை என அனைத்து சட்ட விரோத சம்பவங்கள் தலை துாக்கி உள்ளன கோயில் நகரம் கொலை நகரமாக மாறி வருவது பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் காவல் துறையினர் ரவுடிகள் மீது இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இந்த விவகாரத்தில்  போலீசார் எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பர் என பொதுமக்களும், பாதிக்கப்பட்டோரும் எதிர்பார்த்து வருகின்றனர்.