நியூசிலாந்து அணியுடனான முதல் டி20 போட்டியில் சூர்யகுமார், ரோகித்தின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று இரவு நடைபெற்றது. 

இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணியில் வெங்கடேஷ் அய்யர் அறிமுகமானார். 

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி சார்பில் மார்டின் கப்தில், டேரில் மிட்செல் இருவரும் களமிறங்கி அதிரடி காட்டினார்கள். இதில், நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 164 ரன்களை எடுத்தது. 

இதில் அஸ்வின், புவனேஷ்வர் குமார் தலா 2 விக்கெட் எடுத்தார். இதனால், இந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு வெறும் 164 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய ரோஹித் - ராகுல் ஜோடி, 2 வது ஓவரில் இருந்தே அதிரடி காட்டத் தொடங்கினார்கள். 

இதில், ராகுல் 14 பந்தில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி என 15 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன் பிறகு வந்து சூர்யா குமார் யாதவும் பொறுப்பாகவும் அதிரடியாக ஆடினார்.

மறுமுனையில் ரோஹித் சர்மா ருத்ர தாண்டும் ஆட தொடங்கிய நிலையில், 36 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்ஸ் என 48 ரன்கள் எடுத்து ரோஹித் ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு, வேகம் எடுத்த சூர்யா குமார் யாதவ் 3 சிக்ஸ், 6 பவுண்டரி என்று 40 பந்தில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னவர் வந்த ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் சற்று திணறிய நிலையில், கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் போட்டி வந்து நின்றது.

அப்போது, கடைசி ஓவரில் வெங்கடேஷ் ஐயர், இந்திய அணிக்கான தனது முதல் பேட்டியில் இளம் இறங்கினார். முதல் பந்து வைட் போக அடுத்த பந்தில் வெங்கடேஷ் ஐயர்பவுண்டரி அடித்தார். 

ஆனால், அடுத்த பந்திலேயே அவர் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன்பிறகு ரிஷப் பண்ட் பவுண்டரி அடித்து மேட்சை முடித்து வைத்தார். அதுவும், 19.4 ஓவரில் இந்தியா 5 விக்கெட்டிற்கு 166 ரன்கள் எடுத்து இந்தியா வென்று காட்டியது.

இதனால், நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி 20 போட்டியில், இந்தியா திரில் வெற்றி பெற்றது. 

இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் முதல் டி20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியிருக்கிறது. 

அதுவும், இந்தியா- நியூசிலாந்துக்கு எதிராக 7 தோல்விகளுக்கு பிறகு ரோகித் - திராவிட் கூட்டணி வெற்றி வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.