தமிழகத்தின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிலம்பரசன் TR.கடைசியாக சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து STR , ஹன்சிகா நடிக்கும் மகா.வெங்கட் பிரபுவின் மாநாடு,பத்துதல,கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார்.

STR என்ன செய்தாலும் அவரை பற்றி என்ன செய்தி வந்தாலும் அது வைரலாகி விடும்.சமீபத்தில் சிம்புவின் ட்ரான்ஸபார்மேஷனை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.மாநாடு படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்த பின் வெந்து தணிந்தது காடு,பத்துதல உள்ளிட்ட படங்களின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வருகிறார் சிம்பு.

வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகியுள்ள மாநாடு படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன்,எஸ்.ஜே.சூர்யா,பாரதிராஜா.எஸ்.ஏ.சந்திரசேகர் என்று பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.யுவன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரித்துள்ளார்.மாநாடு படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.இந்த படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது இந்த படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட வீடியோ தொகுப்பு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சிம்பு.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.